நூறுநாற்காலிகள் எழுதியபின் சென்ற ஆண்டுகளில் மாதம் ஐந்துமுறையாவது எவரேனும் என்னிடம் சொல்வதுண்டு ‘இதெல்லாம் அப்ப கதை. இப்ப எங்கசார்?”. அதை ஒரு மிகச்சிறிய திரைப்படமாக எடுக்க முயன்றோம். அப்போது சொல்லப்பட்டது ‘ஜனங்க நம்பமாட்டாங்க. இதெல்லாம் எப்பவோ நடந்த கதை”
நான் சொல்வதற்கான உதாரணங்கள் என் வாசகர்களிலேயே பல உண்டு, ஆனால் அவர்கள் அதைச் சொல்லவிரும்பமாட்டார்கள். விஷ்ணுபிரியாவைத்தான் எப்போதும் சுட்டிக்காட்டுவேன். இப்போது ரோஹித் வெமுலா. இந்தப்பட்டியல் ஒய்வதேயில்லை.
ஜெ