நாட்டரியல் ஆய்வாளரும் , நாடக ஆசிரியரும், நடிகருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் இன்று பாண்டிச்சேரியில் அவரது இல்லத்தில் காலமானார் என்று அறிந்தேன். அவருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இல்லை. அவரது நாடகமான பலியாடுகளை வாசித்திருக்கிறேன். தமிழகத்து தலித் இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரகர்களில் ஒருவர். தீவிரமாக அத்தரப்பை முன்வைக்கும் நாடகம் அது..அதைப்பற்றி ஒரு குறிப்பையும் எழுதியிருக்கிறேன்.
இருமுறை நிகழ்ச்சிகளில் சந்தித்து ஓரிரு மரியாதைச் சொற்கள் பரிமாறியிருக்கிறோம்.என் நூறுநாற்காலிகள் கதை வெளிவந்தபோது தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். உரத்த சிரிப்பொலிகளுடன் பேசும் அவரது குரலை நினைவுறுகிறேன். அவரது பணிகள் தமிழகத் தலித்தியக்கத்தை அமைப்பதில் பெரும்பங்களிப்பாற்றியவை
அஞ்சலி