புதியவர்களின் சந்திப்பு -2

நண்பர்களுக்கு

ஊட்டி புதியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்த நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுபேர் பதிவுசெய்துவிட்டனர். அதற்குமேல் என்றால் பெரிய ஏற்பாடுகள் தேவையாகும். . சற்று விரிவாக்கம் செய்து முப்பதாக்கியிருக்கிறோம். அதற்குமேல் போனால் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கவே அவகாசமிருக்காது.

அத்தனைபேரும் மிக இளையவர்கள். ஆகவே முந்தைய வாரம் அதாவது வரும்  பெப்ருவரி   5,6  ஆம் தேதிகளில் இன்னொரு சந்திப்பை ஈரோட்டில் என் நண்பர் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாமா என நினைக்கிறேன். ஊட்டிக்கு வராதவர்களுக்காக.

இருபதுபேர் அங்கே தங்கலாம். விருப்பமிருப்பவர்கள் எழுதலாம் [email protected]

ஜெ

முந்தைய கட்டுரைமுரண்படும் தரப்புகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27