கோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன்
மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை நவீன இந்தியாவின் சிற்பிகள் அனைவருக்குமே கீதை மகத்தான ஞானநூலாக ஆகி வழிகாட்டியது எப்படி?
நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது? பாரதி, குவெம்பு முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்களுக்கு அது எப்படி மெய்ஞானநூலாக அமைந்தது?
அந்த வினாவிலிருந்து அதைப்பற்றி ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாமென தோன்றியது. அவ்வெண்ணமே இவ்வுரைவரிசையாக ஆகியது
அன்புடன் அழைக்கிறேன் , வருக
நாள் டிசம்பர் 6, 7, 8,9 [நான்குநாட்கள்]
நேரம் மாலை 630
இடம் சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம். கோவை.
பிகு
அரங்கில் வெண்முரசு வரிசை நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்
கீதை உரை ஏன், எப்படி, எதற்காக?
தொடர்புக்கு
9500400093
9842731068
கோவையில் கீதைபற்றிப் பேசுகிறேன்
டிசம்பர் 6,7,8,9 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் மாலை 630 மணிக்கு.
கீதையின் இடம் என்ன?