தேவதச்சனின் கலைக்கூடம்-வேணுகோபால் தயாநிதி-

d d 12

சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு
கவிதை என்பது, ’உயர்ந்து எழுந்து வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ? என்று எண்ணும்படி, வாசிப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில். எழுத்தாளரின் வேலை என்பது “ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று வாசகனை சொல்ல வைப்பது. முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது” என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் இயைந்தது போல அமைந்தவை தேவதச்சனின் கவிதைகள்.

தேவதச்சனின் கலைக்கூடம். வேணு தயாநிதி சொல்வனம் இதழில்

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைவேணு தயாநிதி- வேதா
அடுத்த கட்டுரைகீதை- கடிதங்கள் 3