அஞ்சலி : நொபுரு கரஷிமா

1

தமிழக வரலாற்றாய்வில் முக்கியமான திறப்புகளை உருவாக்கிய வரலாற்றாசிரியர் நொபுரு கரஷிமா மறைந்தார்.

ஆசிய உற்பத்திமுறை என்னும் கருத்தை மார்க்ஸிலிருந்து பெற்றுக்கொண்டு அதைவைத்து இந்தியாவின் அரசியல் பொருளியல் அமைப்பை புரிந்துகொள்ள மூர்க்கமாக மார்க்ஸியநோக்குள்ள வரலாற்றாசிரியர்க்ள் முயன்றபோது அதற்கு எதிரான விரிவான தரவுகளின் அடிப்படையில் மாற்றுச் சித்திரம் ஒன்றை முன்வைத்து ஒரு தொடக்கத்தை உருவாக்கியவர் நொபுரு கரஷிமா

ஆசிய உற்பத்திமுறையின் ஆதரவாளர்கள் இந்தியசமூகம், தமிழ்ச்சமூகம் பெருநகரங்களில் மட்டுமே வளர்ச்சியும் பண்பாட்டு மேன்மையும் கொண்டிருந்தது என்றும் உற்பத்திமுறைகளில் உள்ள தேக்கம் காரணமாக கிராமப்புறங்கள் அரைப்பழங்குடி வாழ்க்கையில் நின்றிருந்தன என்று வாதிட்டனர்.

நொபுரு கரஷிமா சோழர் காலகட்டத்தில் ஒட்ட்மொத்த நாடுமுழுக்க இருந்த நிலவரி முறைமை, நீர் நிர்வாகம் ஆகியவற்றை உரிய தொல்லியல் ஆதாரங்களுடன் நிறுவினார். சோழர்காலத்து நிலவுடைமைமுறை இன்றும் தமிழகத்தில் நிலவுவது, இன்றைய தமிழகத்தின் பொருளியல் அடித்தளத்தை உருவாக்கியது என்பதனால் அவ்வாய்வுகள் தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ளவே முக முக்கியமானவை

சோழர்களை புரிந்துகொள்வதற்கு முக்கியமான ஆய்வுத்தரவுகளை அளித்த இன்னொரு அயல்நாட்டு ஆய்வாளார் பர்ட்டன் ஸ்டெய்ன் [Burton Stein] சோழர்கால அரசு என்பது இன்றைய நோக்கில் ஓர் அரசு அல்ல, அது ஓர் அரசுக்கூட்டு என வாதிட்டவர் அவர். சோழர்கால அதிகாரப்பரவலாக்கத்தை விளக்கியவர்.

நொபுரு கரஷிமாவின் ஆய்வேடுகள் முழுமையாக தமிழில் வெளிவரவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ் வரலாறு குறித்த அனைத்து நூல்களும் தமிழிலேயே கிடைப்பதற்கு அரசுதான் முயற்சி எடுக்கவேண்டும். கன்னட, மலையாள மொழிகளில் முன்னரே நிகழ்ந்துவிட்ட பணி இது. தமிழில் அதற்கான உந்துதல் ஏதும் இல்லை

நொபுரு கரஷிமாவுக்கு அஞ்சலி

நொபுரு கரஷிமா மறைவு பிபிஸி

முந்தைய கட்டுரைசகிப்பின்மை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி, வரலாறு- கடிதம்