ஜெ மோ அய்யா,
1984-1985 வாக்கில் குமுதம் வார இதழில் தொடராக, ஜெ-யின் அழகிய படங்களுடன் , வெளிவந்த இந்த புதினம் ஏனோ தெளிவாக நினைவுள்ளது. But Jeyaraj ayya did not bother to catch the essence of nativity in his sketches. இத்தொடரை பின்பற்றி தமிழ் இளைஞரொருவர் Bike-லேயே உலகம் சுற்றி ‘பட்டாம்பூச்சியின்’ பாதையை தேடி சென்று , அடைந்து , அந்த இடங்களை கண்டு பரவசப்பட்டு அளித்த ஒரு பேட்டியும் அதே வார இதழில் , சில வருடம் கழித்து வெளியானது . அவரெடுத்த புகைப்படங்களுடன். பாபிய்யோனை மொழிபெயர்த்த் ரா .கி .ர உம் உடனிருந்ததாக நினைவு.
Regarding the film you mentioned: 1995-il Delhi Siri Fort ஆடிடோரியத்தில் ‘Gaumont 100 yrs’ film festivalஇல் நான் கண்ட , பாபிய்யோனை ஒத்த கதையம்சமுள்ள ஒரு படம், (L’autre 1917 ஆக இருக்கலாம் !) நினைவுக்கு கொண்டு வந்தது. நீங்கள் கட்டாயம் காண வேண்டிய சித்திரம் அது . தனிமனித ஜீவ, மரண, மான, ஈன போராட்டங்களை உணர்த்தும் கலை படைப்புகள் என்றும் போற்றத்தக்கவை அல்லவா?
உங்களின் இந்த பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி.
சிவராமன் வெங்கட் ராமன்
அன்புள்ள சிவராமன்
பாப்பில்யான் என்னை எழுத தூண்டியமைக்கு அது நாவலாகவும் வாசிக்கப்பட்டமை காரணமாக இருக்கலாம். அவ்வகையில் மனதைக்கவர்ந்த பல படங்கள் உள்ளன
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் Shawshank Redemption பார்த்ததுண்டா என்று தெரியவில்லை. இல்லையென்றால் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். சிறைபறவைகளின் சுதந்திர வேட்கையை மையமாக கொண்ட Stephen King நோவேல்-இன் படமாக்கம். சிறந்த நடிப்பும் ஒலி-ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்த ஒரு நல்ல ஹாலிவுட் படம்.
நவீன்
அன்புள்ள நவீன்குமார்
ஷஸாங்க்ஸ் ரிடம்ப்ஷன் உட்பட பல சிறைப்படங்களை பார்த்திருக்கிறேன். தொழில்நுட்பம் சார்ந்து அவை முக்கியமான படங்கள். பாப்பியானை நான் தேர்வுசெய்ய இரு காரணங்கள். ஒன்று நாவலை திரைக்கதையாக்கும் அதன் உத்தி. இரண்டு அந்த ‘ஷேக்ஸ்பீரியன்’ காட்சி. அது ஒரு உச்சம்
ஜெ