நான்காம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னை வந்தேன். சென்னையில் பகல் தங்கிவிட்டு மலாய் ஏர்வேய்ஸில் கொலாலம்பூர். ஒரு விமானம் மாறி இன்று காலை எட்டரை மணிக்கு பினாங்கு வந்தேன்.தனசேகர் விமான நிலையத்துக்கு கொண்டு விட்டார்
சுவாமி பிரம்மானந்தாவின் த்யான ஆசிரமத்தில் தங்கியிருக்கிறேன். மலேசிய எழுத்தாளர்கள் கெ.பாலமுருகனும் கோ புண்ணியவானும் என்னை விமான நிலையம் வந்து அழைத்து வந்தார்கள்
இன்று மாலையே அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நவீன இலக்கியம் பற்றி பேசுகிறேன்