நகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெயமோகன்,

சில மாதங்கள் முன்பு உங்கள் வலைப்பக்கம் எனக்கு அறிமுகமானது,தினமும் படிக்க தவறுவதில்லை ,

ஆனால் உங்கள் வாசகன் என்று சொல்ல தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை,காரணம் உங்களின் எந்த ஒரு இணையம் அல்லாத படைப்பையும் நான் படித்ததில்லை,சில வருடங்கள் முன்பு விகடனில் வந்த ஒரு கட்டுரை என்னை ரொம்ப சந்தோஷபடவைத்தது,காரணம் அந்த எழுத்து நடை, என் நண்பனிடம் ” மக்கா லேய், இந்த வராம் விகடன் படிச்சயால ஒருத்தன் அப்படியே நம்ம ஊரு பாஷயில எழுதியிருக்கான் சூப்பரா இருந்து கேட்டியால” என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது.. தினமும் உங்கள் பதிவை படித்தவுடன் பின்னூட்டம் அனுப்ப வேண்டும் என்று நினை பேன் ஆனால் ஏதோ ஒரு தயக்கம்,பின்பு கட்டுரை தொடர்பான பிற வாசகர்களின் கடிதங்களை படித்து எனது கருத்தை யாராவது அனுபியிருகிரர்களா என பார்த்ததுண்டு,பல முறை ஒத்துபோனதும் உண்டு. உங்கள் கட்டுரைகளில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது,வைப்பது நகைச்சுவை கட்டுரைகள்,அதில் என்னை ரொம்ப சிரிக்க வைத்தது ‘பழமொழிகள்’ ,நமது நாஞ்சில் நாட்டு நடை காரணமா இருக்கலாம்,அதை படித்ததில் இருந்து உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று வெறியா இருந்து ரொம்ப தாமதமா இப்போ அனுப்புறேன்,அந்த கட்டுரையின் ஒரு வரி என்னை ரொம்ப பாதிச்சது,” உனக்குண்ணு ஒருத்தி இருக்காளேல, மயிராண்டி. அவள நீ மறந்தியாக்கும்? ஆன குடுத்தாலும் ஆசை குடுக்கிலாமாலே? ஆச குடுத்து கெட்டின பெண்ணுக்கு அஞ்சும் குடுக்கவனாக்கும்லே ஆணாப்பெறந்தவன். லே, உனக்கம்மைக்கு ஒரு நெனைப்பு வந்திருந்தா நீ எனக்க பிள்ளையாக்கும் கேட்டுக்க.” இதை படித்த பின்பு என்னை அறிமலையே என்னக்குள் எதோ சிந்தனைகள்,மாறுதல்கள் சொல்ல தெரியவில்லை. ஆனால் எதோ ஒரு தெளிவு எனக்குள்.

அருண்குமார்
நாகர்கோயில்

88

வணக்கம் குரு.,
              உங்கள் நகைச்சுவை கட்டுரைகளிலேயே நான் மிகுந்த ஆர்வமடைவது நீங்கள் உருவாக்கும் பெயர்கள்தான். “கொச்சு குஞ்ஞப்பன் நாயர்”,”நரிமடையில் நாராயண வைத்தியர்”,”மயிலேறும் பெருமாள்”(பெருமாள் மயில் ஏறியதால் ஏதும் சர்ச்சை வரவில்லையென நினைக்கிறேன்)”வேதஞானி கஸ்யப கோத்திரம் ஹரிராம்ஜீ தீனதயாள்ஜீ”, “சித்தாந்த சிரோமணி இலஞ்சி மாணிக்கவாசகம்பிள்ளை”, “சைவக்குருமணி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி வடவை ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தர பண்டார மகாசன்னிதானம்”, “பிரும்ஹஸ்ரீ சோற்றாலுமூடு ஸர்யநாறாயண ஸாஸ்த்ரிகள்”. இதுபோன்ற புராதானமான பெயர்களை கொண்டு முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளலாமா? “சோளிய வேளாளன் குடுமிகூட சும்மா ஆடாது” என்பது போன்ற ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கலாம் அல்லவா!!??
                                                      அன்புடன் மகிழவன்.


முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள் அறுபது
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்