கடிதங்கள்

அன்புள்ள ஜெ..

உங்கள் தளத்தில் பின்னூட்டம் நிறுத்தப்பட்டதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. என அனுபவத்தில் எல்லா சிறந்த கணங்களுக்கும் உண்மையில் ஆயுட்காலம் குறைவு தான் என்று அறிந்திருக்கிறேன். வாழ்வின் எத்தனையோ சந்தோஷ காலங்கள் எதோ ஒரு தடையால் திடீரென்று நின்று விடுவதும்.. பின்பு அதை பற்றிய நினைவோ , அதை நினைவுபடுத்தும் தொடர்புள்ள நபர்களோ பொருட்களோ தான் சாட்சியாய் இருப்பார்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்கள் உங்களுக்கும் எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவரும் நேரடி அறிமுகமாகி , நட்பு கொண்டு சண்டையிட்டு , மனஸ்தாபமாகி மன்னிப்பு கேட்டு என்று வளர்ந்த ஒரு உள்ளார்ந்த தொடர்பு திடீரென்று அறுந்தது போல் இருக்கிறது.

ஆனாலும் ஒரு வகையில் இது பிரச்னை தராத விஷயம். தனது பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் ஒருவர் நினைக்க முடியும், மின்னஞ்சல்கள் அப்படிப்பட்டவை அல்ல. அப்படி பார்க்கும் போது இது சரியான முடிவாக தெரிகிறது.உங்களுக்கு பிடித்த , தொடர்புடைய விஷயங்களை பற்றி வரும் கடிதங்களை பிரசுரம் செய்யலாம். உதாரணத்துக்கு நான் உங்களுடன் chat செய்த (கற்கண்டு கனவு வயல்) விஷயங்களை நீங்கள் பிரசுரித்தது. உண்மையில் நானே எதிர்பாராதது.

WordPress இன் கொள்ளளவு ஒரு காரணம் என்றாலும், முன்பு உங்களை ஆராதித்தவர்கள் திடீரென்று உங்களை பரிகசிப்பதும், தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பதும் என்று எதிர்பாராத விதத்தில் நடந்து கொண்டது வருத்தமளித்தது.இந்த சந்தர்ப்பத்தில் சில சில்வண்டுகள் கத்த தொடங்கி இருப்பதை கேட்க நேர்ந்தது.எனக்கும் உங்கள் பல கருத்துகளில் முரண்பாடு இருந்தது. ஆனால் வெளிப்படுத்தும் முறையில் நாகரிகம் காட்டுவது தானே முறை. குறைந்த பட்சம் நீங்கள் அந்த பின்னூட்டங்களை பிரசுரம் செய்யாமல் இருந்திருக்கலாம். வேறெங்காவது போய் அவர்கள் கத்திக்கொண்டிருக்கலாம் என்று கூட தோன்றுகிறது. ஒருவேளை எங்களுடன் உரையாடுவதில் ஒரு அலுப்பு உங்களுக்கு வந்து விட்டதா?


Chandramohan Vetrivel,
New Delhi.
www.chandanaar.blogspot.comஅன்புள்ள சந்திரமோகன்

பின்னூட்டம் நிறுத்தப்பட்டமைக்கு இடப்பிரச்சினையே காரணம். ஆனால் சலித்துவிட்டேனா என்றால் ஆம் என்பதே பதில்.. பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள பொறுமை இல்லாதவர்களிடமே பேசவேண்டியிருந்தது

விவாதங்களில் ஒருவர் தான் இருக்கும் இடத்தைப்பற்றிய உணர்வுடன் இருந்தாகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அ. கா. பெருமாளிடம் போய் நான் நாட்டுப்புறவியல் பற்றி எனக்கு தெரிந்ததை கொட்டமாட்டேன். முதிரா வாசகர்களைப்பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தங்கள் அகங்காரத்தையே முதலில் காட்டுகிறார்கள்

மூன்றாவதாக நமக்கு அறிமுகமாகும் எந்த புது விஷயமும் நம்மை கொஞ்சம் அசைக்கும், சீண்டும் என்ற உணவ்ரு அதனால் அவ்ரும் பொறுமை பலரிடம் இருப்பதில்லை

என்னைப்பொறுத்தவரை நான் விவாதங்களை அத்தகையோரிடம் மட்டுமே வைத்துக்கொள்கிறேன். இணையவிவாதம் பொதுவாசகர்களால் கவனிக்கபப்டும் என்பதனாலேயே விரிவாக எழுதினேன். அது சட்டென்று வெறும் சண்டையாக ஆவதைக் கண்டேன்

கடிதங்கள் பிரசுரமாகும்

ஜெ

ஜெயமோகன் அவர்களுக்கு,

இது நான் உங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது முதன் முறை, உங்களின் நெருங்கிய நண்பர் அன்பு மூலமாக உங்களின் எழுதும் கலையை வாசித்தேன். அதில் உள்ள உள்ளடக்கத்தையும் ஆழத்தையும் கண்டு வியந்தேன்.பிறகு உங்களின் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என தொடர்ந்து வாசித்து வருகிறேன். எதையும் ஆழமாகவும், உளவியல்ரீதியாகவும் அவரவருக்கு உண்டான தர்கங்களை முன்வைத்து எழுதும் உங்களின் நோக்கு என்னை ஈர்த்தது. உங்களின் தனித்துவ உருவகங்களுக்கும் உவமேயங்களுகும் நான் ரசிகன்,

‘பெருவயிறை பிள்ளை என்பது போல்’
‘வானத்தின் துதிக்கை போல இருந்தது ஆறு’
‘எலை நக்குத நாயிக்கு, வாயி நக்குத மறு நாய்’
‘தோல் ஏறிய இட்லி’
‘மணல் கடிகாரம் மணலை இம்மி இம்மியாக உதிர்த்து கொண்டிருகிறது’
என்று இன்னும் பல……

உங்களின் ஊமைச்செந்நாய் மற்றும் ஏழாம் உலகம் என்னை வேறோர்
தளத்திற்கு எடுத்துச்சென்றது. உங்களின் எழுதினால் எனக்கேற்ப்பட்ட அனுபவங்களை உங்களிடம் நேரில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றுதான், உங்களின் ப்ளாக்ஐ தொடர்ந்து வாசித்து வரும் போதும் பின்னூட்டம் ஒன்று கூட எழுதியது இல்லை.

இதே போல் சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது இல்லத்தில் சந்தித்து சில நிமிடங்கள் பேசினோம். உங்களை சந்திக்க வேண்டுமென்று ஆவலாக உள்ளேன் இதனை அன்பு சாரிடமும் தெரிவித்துள்ளேன்.

நன்றி.
மோகன்.

அன்புள்ள மோகன்

நன்றி. ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையில் சந்திப்போம்

ஜெ

அன்புள்ள ஜெ.,

தங்கள் தளம் பெரும்பாலும் பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தது. அது நிறுத்தப்பட்டது வருத்தமே. எனினும் கடிதம் மூலம் கொள்ளும் தொடர்பில் இருக்கும் ஒரு நெருக்கம் கலந்த மகிழ்ச்சி பின்னூட்டத்தில் வந்ததே இல்லை.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

உண்மை. பின்னூட்டங்களில் பெரும்பாலும் யோசிக்காமல் எழுதிவிடுகிறார்கள். கடிதங்கள் கொஞ்சம் தயங்கச்செய்கின்றம

பின்னூட்டங்களில் சொந்த பெயரையும் சொந்த மின்னஞ்சல் முகவரியையும் அளித்து எழுதியவர்கள் மிகச்சிலரே

ஜெ

ஜெயன்,
ஆடும் கூத்து முழுவதாக வந்து விட்டது..நான் பார்த்துவிட்டேன்.
‘ஹேமாவின் காதலர்கள்’ படத்தை அது ஓடிய இரண்டு மூன்று நாட்களிலேயே முதல் நாள் சென்னை சபையரில் பார்த்தேன்.


ஜீவா JEEVA

அன்புள்ள ஜீவா

அந்த தகவல் எனக்கு தெரியாது. சேரனுக்கும் சந்திரனுக்கும் சண்டை என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன்

நீங்கள் அவற்றைப்பற்றி எழுதலாம்

ஜெ

Dear Jeh,

It was in the year 1989 – I was in Mumbai doing a project work for my MBA. Was walking from Victoria terminus to Central on an evening.. suddenly I saw lot of commotion – 3-4 mongrels had surrounded a old lady and were barking ferociously.. I thought I will go near and help.. as I went near, I could not control myself..

This old lady had come for a walk with her kutty Alsatian dog.. Suddenly, the stray dogs had surrounded her and this kutty dog went between her legs to hide.. And this old and valiant lady was barking at the stray dogs and telling them to go away..

Then I realised that the reasons for having a dog these days are far different from the olden days.. the best part is that the dogs also seem to know that.

Bala

முந்தைய கட்டுரைஅனல் காற்று-இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைகொற்றவை-கடிதம்