ஜெ அவர் கட்டுரைகளுக்கு என்னென்ன எதிர்வினைகள் வரும் என்பதை நன்கு அறிவார். அதைப் போல அவரை தினமும் வாசிக்கும் வாசகர்களும் இந்தக் கட்டுரையில் சீண்டுகிறார் என்பதை ஊகிக்கத்தான் முடிகிறது.
கள்ளுக்கடை காந்தி கட்டுரை ஒர் சீண்டல் என்று பார்த்தவுடனே தெரிந்தது. கள்ளுக்கடை காந்தி என்ற தலைப்பே அதைச் சொல்கிறது. இருந்தும் அந்தக் கட்டுரை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது காந்தி கள்ளை எதிர்ப்பாரா அல்லது குடிப்பவர்களிடம் ‘சியர்ஸ்’ சொல்வாரா என்பதற்காக இல்லை.
ஊட்டி முகாம்களில் நாம் போதையை, குடியை அனுமதிப்பதில்லை. பல இடங்களில் குடிக்கு எதிரான நிபந்தனைகள் இருக்கின்றன, அதன் நடைமுறைப் பயனை நாம் நன்கு அறிவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் குடியை புரோமோட் செய்வது போன்ற தொனி இருக்கிறது. அந்த முரண்பாடுதான் என்னை உறுத்துகிறது. கள் கொள்ளை லாப ரசாயனத்திற்கு எதிரான நல்ல மாற்று என்பதால் இந்த முரண்பாட்டை கணக்கில் கொள்ளத் தேவையில்லையா?
ராஜா
அன்புள்ள ராஜா
நான் சொல்வது ஒழுக்கவியலும் தத்துவமும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தவை அல்ல என்பதே. ஒழுக்க ம் காலம்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.
மாமிசம் உண்பதும் மது அருந்துவதும் காந்தியம் அல்ல என்றால் ஐரோப்பியர் எவருக்கும் காந்தியம் தேவையில்லை அல்லது சாத்தியமில்லை என்று பொருளா? இந்தியாவில் காந்திய ஒழுக்கநெறிகளை பிறப்புச்சூழல் சார்ந்து கடைப்பிடிக்கும் சிலர் மட்டும் மேற்கொண்டு காந்தியவாதிகளாக ஆக முடியும் என்றா? இவான் இலியிச்சும் , ஷூமாக்கரும், லாரி பேக்கரும், வெரியர் எல்வினும் காந்தியவாதிகள் இல்லையா?
இப்படி எளிமையாகக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வது புரியும். காந்திய ஒழுக்கவியல் ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. ஆனால் அது காந்தியத்தை முடிவுசெய்யவேண்டியதில்லை. நான் குடிப்பதில்லை. ஆனால் குடி தவறானது ஒடுக்கப்ப்படவேண்டியது என வாதிடுவதுமில்லை. குடி வரலாற்றுக்காலம் முதல் இருந்துவந்துள்ளது. என்றுமிருக்கும். அதன் சாத்தியமான சிறந்த பயன்பாடு பற்றியே பேசமுடியும்
மதுக்கடையில் குடிப்பதற்கும் இலக்கியக்கருத்தரங்கில் குடிப்பதற்கும் உள்ள வேறுபாடு மிகமிகத்தெளிவானது என்றே நினைக்கிறேன். குடிப்பவர்கள் நல்ல மதுவை குறைந்த செலவில் குடிப்பதற்கும் அதை இனிய அனுபவமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கும் குடிக்காதவர்களும் குடிக்கலாமே என்று அறைகூவுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு என்றும் நினைக்கிறேன்.
ஒழுக்கவியலின் முதல்பாடமே நாம் நம்புவதை பிறர் மேல் திணிக்கவும் நம் நம்பிக்கைக்கு ஏற்ப பிறரை கட்டுப்படுத்தவும் இடைவிடாது முயலாமல் இயல்பாக இருத்தல். உலகவிரிவில் ஒழுக்கமுறைகள் வெவ்வேறானவை என்று உணர்ந்து அந்த வாழ்க்கைமுறைகளை புரிந்துகொள்ள முயல்தல்.
ஜெ
**
ஜெ,
வேறொரு குழுமத்தில் இந்த விவாதத்தில் மேற்க்கோள்களுக்கு நான் இட்ட பதில்.
———————————————
RESIDENTIAL ADDRESS AT COW-PROTECTION CONFERENCE, BELGAUM, December 28, 1924
“Even in India under Swaraj, in my opinion, it would be unwise and improper for a Hindu majority to coerce by legislation a Musalman minority into submission to statutory prohibition of cow-slaughter.
Nevertheless, a large number of vocal Hindus have began to believe the superstition that the Union belongs to the Hindus and that, therefore, they should enforce their belief by law even among non-Hindus. Hence an emotional wave is sweeping the country, in order to secure legislation prohibiting the slaughter of cows within the union.
In this state, which I hold, is based on ignorance, claiming to be a knowing lover and devotee, second to none in India of the cow, I must try in the best manner I can do dispel the ignorance.”
http://www.gandhiserve.org/cwmg/VOL030.PDF
இந்த உரையை மேற்க்கோள் காட்டி காந்தியே சட்ட ரீதியாக பசு கொலையை தடுக்க கூடாது என்று பேசியுள்ளார் என்று கூற முடியும்.
ஆனால் அந்த கட்டுரையின் சாராம்சம் என்பது காந்தியை இன்றைய கால கட்டத்திற்க்கு கண்டெடுப்பது. மேற்க்கோள் எடுத்து நிலையை நிறுத்துவதோ எதிர்ப்பபதோ அல்ல.
இன்றைய காந்தி உரை – http://jeyamohanav.blogspot.in/2015/09/22-09-2015.html
கோகுல்
*
ஜெ,
http://www.gandhitoday.in/2013/09/blog-post_17.html
http://www.gandhitoday.in/2013/09/2.html
http://www.gandhitoday.in/2013/09/3.html
http://www.gandhitoday.in/2013/09/4.html
நவகாந்திய வாழ்க்கைமுறை – மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரை இங்கு உதவகூடும்..
http://www.gandhitoday.in/2013/10/blog-post_23.html
http://www.gandhitoday.in/2013/07/blog-post_22.html
இவை ஆஷிஸ் நந்தியின் ஆக்கங்கள்..இவையும் உதவும்..
சுநீல் கிருஷ்ணன்