இன்றில் எஞ்சியவை

Indru Petravai

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பதுபோல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன.

சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள் , எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை. இவற்றை முதலில் தொகுப்பாக வெளியிட்ட உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி. மீண்டும் வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு அன்பு

ஜெ

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இன்றுபெற்றவை மறுபதிப்புக்கான முன்னுரை

முந்தைய கட்டுரைசஹ்யமலை மலர்களைத்தேடி – 5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37