அன்புள்ள ஜெ ,
உங்களின் யாருக்கு சிலை வைக்கலாம் என்ற கட்டுரையில்,
1)வெள்ளையனுக்கு எதிராக சுதந்திரம் கேட்டுப் போராடிய, ஹரிஜனங்களுக்கு பூணூல் போட்ட, கண்ணன் பாட்டுப் பாடிய, நெற்றியில் நீறு, குங்குமத்துடன் தமிழ் போல் எங்கும் காணோம் என்ற பாரதியையும்
2)வெள்ளையனுக்கு நாடகம் நடத்திப் பணம் சேர்த்துக் கொடுத்து சுதந்திரம் வேண்டாம் என்ற, பிராமணர்களின் பூணூலை அறுத்த, ராமருக்கு செருப்பு மாலை மாட்டிய, குளிக்காமல் நாத்திகம் பேசி தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற ஈ வே ராமசாமியையும்
ஒரே தட்டில் வைத்து சிலை வைக்கலாம் என்பது உங்களையும் , அர்ஜுன் சம்பத்தையும் ஒரே மேடையில் ஏற்றுவது போல் தோன்றுகிறது. சரியாகப் படவில்லை. தயவு செய்து பாரதியின் பெயரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கி விடுங்களேன்?
நன்றி,
கார்கில் ஜெய்.
திரு கார்கில் ஜெய்
உங்கள் கொல்லைப்பக்கத்தில் வைக்கும் சிலைகளை நான் பட்டியலிடவில்லை. அதை உங்கள் சொந்த சாதி மதம் நோக்கி வைத்துக்கொள்ளுங்கள்
ஜெ
ஜெயமோகன்,
உங்கள் சிலைப்பட்டியலில் இஸ்லாமியர் எவருமே இல்லையா? உங்கள் பார்வையில் இஸ்லாமியர் தமிழ்நாட்டுக்கு எந்தப்பங்களிப்பும் ஆற்றவேயில்லையா? எல்லா சாதிக்கும் அதில் இடமிருப்பதை பார்க்கிறேன். கிறிஸ்தவர்கள்கூட இருக்கிறார்கள்
ஃபைசல்
அன்புள்ள ஃபைசல்
நான் சிலைகளை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வைக்கவில்லை
ஜெ