குமரகுருபரனின் கவிதைத்தொகுதியான ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ இவ்வருடத்தைய ராஜமார்த்தாண்டன் கவிதை விருதுக்குத் தேர்வாகியிருக்கிறது. நாகர்கோயில் நெய்தல் அமைப்பால் அளிக்கப்படும் விருது இது
முதல் தொகுதிக்கே அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியான செய்தி. குமரகுருபரனுக்கு வாழ்த்துக்கள். இத்தருணத்தில் எப்போதும் கவிதைக்குள் நெஞ்சழுந்தி வாழ்ந்த நண்பர் ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியை நெகிழ்வுடன் நினைத்துக்கொள்கிறேன்
ஜெ