ஜெயமோகன் சார்
இன்று நீங்கள் கரசூர் பத்மபாரதி பற்றி எழுதிய கட்டுரை வாசித்தேன். அச்சிதழ்கள் பற்றிய கட்டுரையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீகள், என்ன சொல்லவருகிறீர்கள் என்று இந்தக்கட்டுரை மிகாச்சிறப்பாகச் சொல்கிறது. பத்மபாரதியின் சாதனை வியப்பளிக்கிறது. அவரது தைரியமும் அர்ப்பணிப்பும் ஆச்சரியமளிப்பவை. அத்தகைய அறிவார்ந்த சாதனைகளைத்தான் ஒரு சமூகம் கொண்டாடவேண்டும்.ஆனால் அவரைப்போன்றவர்களை நம் இதழ்கள் பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண் அறிவார்ந்த சாதனைகள் செய்வது அவர்களுக்கு முக்கியமே இல்லை. அவள் ஓர் அழகுப்பொம்மையாக இருக்கவேண்டும். டிவிட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஓயாமல் அர்த்தமில்லாத பேச்சு பேசிக்கொண்டிருக்கவேண்டும். சில்லறைத்தனமாக ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் ஓரளவு பார்க்க சுமாராகவும் இருக்கவேண்டும் . அவர்கள் கண்ணில் அதுதான் சாதனை. அவர்களைத்தான் நம்பிக்கை ஒளிக்கீற்று என சொல்வார்கள். இந்தக்கசப்பான உண்மையை உங்களைப்போன்ற சிலர்தான் சுட்டிக்காட்டமுடியும். மற்றவர்கள் இளைஞர்களை ஊக்குவிப்பது என்ற பாவனையில் இந்த சல்லித்தனத்தை ஆதரிப்பார்கள்.நீங்கள் சரியான முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். தப்பான முன்னுதாரணத்தை கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். நன்றி
செல்வி