நேற்று [10-9-2015] மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி ஈரோடு வந்தேன். இன்று விடியற்காலை நண்பர்கள் 14 பேருடன் கிளம்பி ஹசன் அரிசிக்கரே பகுதிகளில் உள்ள ஹொய்ச்சாள கலைக்கோயில்களை பார்த்துவிட்டு 13 அன்று மாலை திரும்பி ஈரோடு வருவேன்.அன்றே ரயிலில் நாகர்கோயிலுக்குத் திரும்புவதாகத் திட்டம். நண்பர்களுடன் ஒரு வேனில் பயணம்செய்கிறோம். இத்தனை நண்பர்களுடன் பயணம்செய்வது இதுவே முதல்முறை. பாதிக்குமேல் நண்பர்கள் புதியவர்கள்.
இந்தியக்கட்டிடக்கலையின் உச்சங்களில் ஒன்று ஹொய்ச்சால கலைமரபு. மிகவிரிவாகவே எழுதபப்ட்டுவிட்டது. இணையத்திலேயே வாசிக்கலாம். நான் பலமுறையாக இப்பகுதிகளில் பயணம்செய்துள்ளேன். ஆனால் மீண்டும் ஒருமுறை தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் அவற்றை பார்க்கலாமென நினைக்கிறேன். நேரில்பார்ப்பது வேறு ஓர் அனுபவம். அது அறிதல் அல்ல, உணர்தல்