ஆலிவர் சாக்ஸ் கடிதம்

Oliver-Sacks-009

அன்புள்ள ஜெயமோகன்,

நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸின் மரணச் செய்தி அறிந்ததும் ‘சொல் புதிது‘ இதழில் என்னுடைய மொழியாக்கத்தில் வெளியான ‘நிறங்களை இழந்த ஓவியனின் கதை’ நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போதும்கூட சொல் புதிது இதழ் குறித்து யாரேனும் நண்பர்கள் பேசும்போது அந்தக் கட்டுரையை மறக்காமல் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இன்று மீண்டும் அதை வாசித்தபோது சொல்புதிது இதழ் நடத்திய காலங்கள் நினைவில் அசைந்தன.
மற்றபடி நலம். சந்திப்போம்.

அன்புடன்

எம் கோபாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ஆலிவர் சாக்ஸ்
அடுத்த கட்டுரைகாளிந்தி காளிந்தி…