ஜெ
பாபநாசம் மிகவும் பிந்தி பார்த்தேன். வசனங்கள் இயல்பாக அழகாக இருந்தன. மூலத்தையும் பார்த்தேன், அதில் இல்லாத வசனங்கள். ‘இந்த உலகத்திலே தனக்கு முக்கியமில்லாததை யாருமே ஞாபகம் வச்சுக்கிடறதில்லை’ என்ற வசனம் படத்தின் சாராம்சத்தையே சொல்கிறது. ‘எனக்குத்தெரிஞ்ச உண்மை என் குடும்பம்தான்’ இன்னொரு எளிமையான அபாரமான வசனம். படத்தின் வெற்றிக்கு நீங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள். பாபநாசம் ஐம்பதாவது நாளைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்,
ஒரு சினிமாவில் வசனத்தின் பங்கு மிகச்சிறியது. அதுவும் சரியாகச் சொல்லப்பட்டால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. அது இயக்குநர் மற்றும் நடிகரின் கலையே.
ஆயினும் படம் ஐம்பதாவது நாளுக்குப்பின்னரும் கூட்டமாக பார்க்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஜெ