காந்தியின் கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமா!!

இப்பொழுது தான் அரவிந்தன் கண்ணையனுக்கு தாங்கள் எழுதிய கடிதத்தை தளத்தில் படித்தேன். அந்த கடைசி வரி இதயத்தை தொட்டது.

காந்தி இ௫ந்தி௫ந்தால் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக யாகூப்பை மன்னித்தி௫ப்பார் என சில “காந்திய” நண்பர்களே சொல்ல ஆரம்பிப்பார்கள். நண்பர் சித்து அவர்கள் காந்தியின் நெகிழ்வான சில கடிதங்களை பகிர்ந்தி௫ந்தார். அதில் ஒன்று தான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. நபிகள் பற்றி தவறாக பேசியதற்காக இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டதை அடுத்து அவர் எழுதிய கடிதம்.

ஏறக்குறைய உங்களின் கடிதத்தின் சாரத்தை போல அவர்களின் மனசாட்சி நோக்கி எளிய கேள்வி. இதையும் இந்துத்துவம் என்று எளிதில் புறந்தள்ளி விடுவார்கள்.

நன்றி,

ரகுராமன்

IMG-20150819-WA0031

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87
அடுத்த கட்டுரைதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015