அன்பு ஜெயமோகன்,
எப்படி இருக்கீங்க?
‘ஏறும் இறையும்’ என்கிற சிறுகதையை வாசித்தேன். என் போன்ற சங்கீதப் பைத்தியத்துக்கு இது போன்ற கதை எவ்வளவு உவப்பாய் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கதை சதாசிவத்தின் மன நிலையில் சொல்வது போல் கோயிலில் சிவனும் கணங்களும் உலா வரும் விவரிப்பை கூட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏறு என்றால் என்ன? சிங்கமா அல்லது மாடா?
தேவகாந்தாரியைப் பற்றி எழுதி விட்டு மைசூர் ராஜா ஐயங்காரைக் கேட்காமல் இருந்தால் எப்படி? வாங்க கேட்போம்:
அன்புடன்,
அஸ்வத்