கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

அக்னிப்ரவேசம் M,S.சுப்பலக்ஷ்மி கட்டுரை மிகைப்படுத்தப்படாத அருமையான கட்டுரை. அதில் பெங்களுரு நாகரத்தினம்மா பற்றி அதிக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. பெங்களுரு நாகரத்தினம்மா அவர்கள் திருவையாறு தியாகராஜர் கிருதிகளை ஆத்மார்த்தமாக நேசித்தார். இன்றைக்கு தியாகராஜர் ஆராதனை இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆரம்பகாலத்தில் மிக பெரிய அளவில் பொருளுதவி செயதார். பிராமணர்கள் தியாகராஜர் ஆராதனையை மிக சிரமபட்டு செய்துவந்தபோது பெங்களுரு நாகரத்தினம்மா பெருமுயற்சியால் சிறப்பாக இன்று வரை கொண்டாடப்படுகிறது. பிராமணர்கள் காட்டாத ஆர்வத்தை விட பிராமணர் அல்லாத நாகரத்தினம்மா காட்டியது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தியாகராஜர் சமாதி எதிரில் சிலை வடிக்கப்பட்டதாக அறிகிறேன். தியாகராஜர் ஆராதனை முடிவில் நாகரத்தினம்மா அவர்களும் நினவு கூறப்பட்டு வழிபடப்படுகிறார்கள்.

அன்புடன்-மாத்ருபூதம் K.R.

அன்புள்ள மாத்ருப்பூதம் அவர்களுக்கு நன்றி

நாகரத்தினம் அம்மாவைப்பற்றி பிறர் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஜார்ஜின் நூலின் உள்ளடக்கத்தையே எழுதினேன்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 21
அடுத்த கட்டுரை’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.