வந்து சேர்ந்தேன்

6

பதினொன்றாம் தேதி காலை 11.30 மணிக்கு, ஒருமணிநேரம் தாமதமாக, டொராண்டோ விமானநிலையம் வந்துசேர்ந்தேன். அ முத்துலிங்கம், செல்வம், ஆனந்த் உன்னத், உஷாமதிவாணன் விமானநிலையம் வந்து வரவேற்றனர். இனிய பயணம் என்றுதான் சொல்லவேண்டும். சென்னையில் ஏறி அபுதாபி வரை தூக்கம். வெண்முரசு ஓர் அத்தியாயம் எழுதினேன். [தனிப்பட்ட நன்றி, செல்வேந்திரனுக்கு. கிளம்பும்போது அவர் வீட்டுக்கு கொண்டு வந்து இரவலாக அளித்த மேக்புக் கணிப்பொறி மிக உதவியாக இருந்தது. விமானத்தின் இருளிலும் நான் தட்டச்சு செய்ய முடிந்தது . இதன் அழகு என்னை மிகமிக கவர்கிறது] அபுதாபியில் அதிகநேரம் தங்கவில்லை. மீண்டும் தூக்கம். மீண்டும் கொஞ்சம் வெண்முரசு. முதுகுவலி இருந்தது. ஆனால் இப்போது, பன்னிரண்டாம் தேதி காலை ஐந்து மணி, தூங்கி எழுந்ததும் போய்விட்டது. நேற்று மாலை ஒண்டாரியோ எரிக்கரை சென்றிருந்தோம்.

3

4

5

முந்தைய கட்டுரைஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13