மிரட்டலை எதிர்கொள்ளுதல்

ஜெ,

நான் உங்கள் கட்டுரைகளால் கவரப்பட்டவன். குறிப்பாக நீங்கள், ஒரு பிரச்சனையை அணுகும் முறையினாலும் உங்கள் தரப்புனை முன் வைக்கும் முறையினாலும்.உங்களின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பற்றிய விமர்சனம் முழுதும் சரியே. அவர்கள் இக்கால இளைஞர்களிடம் மதவெறியை ஊட்டி தவறான பாதைக்கு திருப்பகிறார்கள். அவ்வடிப்படைவாதிகளை எதிர்கொள்வது பெரும சவாலாக உள்ளது. அவர்கள் எதையும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் எளிதாக கூறும் கருத்துக்கள் கூட திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. உங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி.

உங்களுக்கு வரும் வசைகளையும், மிரட்டல்களையும் எப்படி கையாளுகிறீர்கள். அத்தருணத்தில் உங்கள் மனவோட்டம் எவ்வாறு இருக்கும்? குறிப்பாக உங்களைப் பற்றி அவதூறு பரப்பப்படும் சமயத்தில்.

-ரியாஸ்

அன்புள்ள ரியாஸ்,

நான் எதிர்கொள்ளும் வசைகள் மிரட்டல்கள் எல்லாம் மிகச்சாதாரணமானவை. இங்கே பெரிதாக புகழ்பணம் எதையும் எதிர்பாராமலிருந்தாலே போதும் இதற்கு

உண்மையில் ஆயுதமேந்திய வன்முறையாளர்களைச் சந்திக்கும் அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் இதையெல்லாம் ஒப்பிடவேகூடாது. அத்தகைய சூழலில் நான் இதேபோன்ற துணிச்சலுடன் இருப்பேனா என்று கேட்டால் மாட்டேன் என்றே இப்போது எண்ணத் தோன்றுகிறது. அதற்கு ஒரு தற்கொலைமனநிலையே தேவையாகிறது. என்னைப்போன்றவர்கள் கனவுஜீவிகள்.

நான் எந்த இளைஞரிடமும் தீவிரவாதம்போன்றவற்றை எதிர்கொள்ளுங்கள் என்றெல்லாம் இன்றைக்குச் சொல்லமாட்டேன். ஏனென்றால் என் மகனிடம் அதைச் சொல்ல என்னால் முடியாது. வாழ்க்கை இனியது என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது அவனிடம்

ஜெ

முந்தைய கட்டுரைபிரதிலிபி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20