ஒழுகினசேரி

Picture 011

வணக்கம் ,

சுந்தர் துபாயில் இருந்து , நான் தரமங்களம் மணி போல் இல்லாமல், உங்களை பார்த்து பேசியது , மறக்க முடியாத அனுபவமாக ஆகி விட்டது . ( ஆசிப் மீரான் வீட்டில் , நாஞ்சில் நாடன் அவர்களுடன் ).

உங்களின் பசி பற்றிய பேச்சு படிக்க நேர்ந்தது , அதில் தி.ஜானகிராமன் கதை அற்புதம் ( எல்லா கதைகளுமே அற்புதம் )…

நான் முன்பு எழுதிய …அந்த பசி அல்லது பிரேம்சந்த் அவர்களின் நாவலுக்கு நேர் எதிராக ஏற்பட்ட ஒரு அனுபவம். .

சமயம் கிடைத்தால் பார்க்கவும்.
http://trichisundar.blogspot.ae/2010/05/blog-post_30.html

நிறைய எழுத்து பிழைகள் உண்டு…ஆர்வ கோளாறில் , அவசரத்தில் சரி பார்க்க வில்லை. .. இங்கே ராதா கல்யாணம் நடக்கும் பொழுது – அஷ்டபதி பாடும் சமயத்தில் உங்களை நினைந்து கொள்வேன் !!!!.

நன்றி
சுந்தர்

அன்புள்ள சுந்தர்

நல்ல கட்டுரை

நினைவுத்தொகுப்பு என்பது வலைப்பூ எழுத்தில் முக்கியமானது. சரியாக எழுதப்படும்போது புனைவுக்கு இணையான அகநகர்வை அளிக்கிறது

, மேலும் ஒழுகினசேரி

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14
அடுத்த கட்டுரைஒவ்வொருநாளும் விருது