ஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது

1

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என ஷோபா சக்தியை நினைக்கிறேன். அவர் நடித்த தீபன் என்ற சினிமா உலகசினிமாவிழாக்களில் முதன்மையான கேன்ஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் முதற்பரிசு பெற்றிருப்பதை அறிந்து பெருமிதம் அடைந்தேன். ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய இந்த பிரெஞ்சுப்படம் புலம்பெயர்ந்த ஈழ அகதிகள் ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கையின் சித்திரம்

கேன்ஸ் விழாவில் பங்கெடுப்பதென்பதே இந்திய சினிமாக்காரர்களின் கனவு. அங்கே விருதுபெறுவதென்பது ஒருவகையில் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று. ஷோபா சக்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’
அடுத்த கட்டுரைஊட்டி முகாமனுபவம்