அஞ்சலி : குவளைக்கண்ணன்

1

என் பழைய நண்பரும் கவிஞருமான குவளைக்கண்ணன் [ரவி] மறைந்தார். நான் தருமபுரியில் இருக்கையில் சேலத்தில் இலக்கியச்சுற்றம் ஒன்று இருந்தது. குப்புசாமி, கணபதி சுப்ரமணியன். க.மோகனரங்கன் போன்றோருடன் குவளைக்கண்ணனும் அதில் இருந்தார். மாதமொருமுறை சந்திப்போம். இலக்கியம் அரட்டை என்று மகிழ்ச்சியான நாட்கள் அவை

பின்னர் காலச்சுவடு இதழ் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புகளில் அவரை சந்திக்கமுடிந்தது. பொதுவாக நக்கலும் கிண்டலுமாகப் பேசுபவர்.அவரது ஆதர்ச எழுத்தாளர் சு ஜி நாகராஜன். பின்னர் அவர் தன்னை காலச்சுவடின் பகுதியாக வலுவாக உருவகித்துக்கொண்டமையால் தொடர்பு குறைந்தது

குவளைக்கண்ணன் என்றபெயரில் இரு கவிதைத்தொகுதிகள் வந்துள்ளன. மாயா பஜார், பிள்ளை விளையாட்டு நீட்சேயின் இவ்வாறு கூறினார் ஜரதுஷ்ட்ரா என்ற நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்

ரவி மூளைக்கட்டியால் உயிரிழந்ததாகச் செய்தி வந்தது. இனிய நாட்களை நினைத்துக்கொண்டேன். அஞ்சலி

முந்தைய கட்டுரைபாடலிபுத்திரம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகாண்டவம் நாவல்