சாருவும் மேனகாவும்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

சாரு அவர்களின் கடிதம். அதில் மேனகா காந்தி ஊழியரை அடித்த விவகாரம் பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக விளையாடுகிறது அங்கே

ஜெ
2

மாண்பு மிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் மீது குற்றசாட்டு பற்றி.

சாரு ஹாசன்

ஆங்கிலத்தில் USE OF FORCE என்று சொல்லப்படும் செயல் எப்போது குற்றமாகிறது என்று நம் சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள்.? நான் 14 வயது வரை என் 28 வயது தாயிடம் மல் யுத்தம் செய்து தோற்றிருக்கிறேன். அனேகமாக என் 17 வது வயது முதல் யாரையும் அடிப்பதற்கு கையை ஓங்கியதில்லை. கமல் தன் ஐந்து வயதிலேயே தன்னைவிட பத்து மடங்கு மூத்தவர்களுடன் சரிசமமாக பழகியதால் தன்னிடம் பணி செய்பவர்களிடம் வாயால் கண்டிப்பது தவிற வன் முறை பயன் படுத்துவதில்லை என்று நம்புகிறேன்.கமலுடைய விவாகரத்தான மனைவிகள் கூட கமல் அடிக்கடி கணவன் என்ற முறையில் அவர் கற்பை அவரே காக்க தவறியது தவிர மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதில்லை என்று என்னிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து இந்த தவறை பல ஆண்டுகளுக்குமுன் ஒரு மந்திரி எனக்கு சொந்தக்கரரான ஒரு ஐ ஏ எஸ் கலெக்டரை கன்னத்தில் அடித்\ததில் அந்த ஐ ஏ எஸ் திரும்ப அறைந்து விட்டு உடனே வேலையை இராஜினாமா செய்து விட்டார்.இரு தரப்பாளர்களாலும் ‘அழுக்காறு’ வெளிவராமல் மறைக்கப்பட்டது.ஒரு ஆண் மந்திரி இப்படி ஒரு “காட்டு-மனிதரை”.(மன்னிக்கவும் FOREST WORKER என்பதற்கு ஒரு உன்னதமான் தமிழ் சொல் பயன்படுத்தும் தெள்ளு-தமிழ் அறிவு இல்லாதவன் நான்) சில தட்டுக்கள் தட்டியிருந்தால் அவர் மன்னிப்பு கேட்காமலே உழைப்பாளி அவரை மன்னித்திருப்ப்பார்.
1

ஒரு பெண் மந்திரிக்கு மட்டில் ஏன் இந்த விளம்பரம். நான் சொன்ன மந்திரியை திருப்பி அடித்த ஒரு நிகழ்வு தவிர.ஆண் மந்திரிகள் இந்த தவறை செய்ததே இல்லையா?… USE OF FORCE என்ற குற்ற விளக்கத்துக்கே எத்தனை மாறுபட்ட கருத்துக்கள். சபாஷ் என்று முதுகில் அடித்தால் குற்றமில்லை. “நாயே” என்று சொல்லி கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு தட்டினால் அது இபிகொ 323 கீழ் குற்றம்.

நான் வக்கீலாக தொழில் புரியும்போது தேவைக்காக USE OF FORCE பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு முறை வக்கீல் தினதயாளன் என்பவர் கொச்சை சொற்களை பயன்படுத்தி அன்று சர்க்கார் வக்கீலாக இருந்தவரை நீதிவிசாரனையின் போது திட்டியதில் அவர்.வக்கீல் திண்தயாளனை தாக்க முயன்றபோது நான் பாய்ந்து உதவி பப்ளிக் பிரசிக்யூடரோடு கட்டி உருண்டு “அட பாவி நாளை நீ நீதிபதியாக வேண்டியவன் இது என்ன முட்டாள்தனம்?’ என்றேன் அவர் “ அண்ணே உங்க முது பத்திரம்! வாங்கண்ணே வெளியே போய் விடுவோம்!’ என்றதும் இருவரும் வெளியே சென்றோம்.

மற்றொரு முறை பரமக்குடி முனிசிபாலிடி தலைவர் வக்கீல் ராக்கன் என்ற என் முன்னாள் நண்பருடன் ஏதோ தகராறு நடந்து.என்னிடம் குறை கூற ஆபீசுக்கு வந்திருந்தார் இன்று மும்பயிலிருக்கும் என் சகோதரி விடுமுறையில் வந்திருந்த நேரம். அதே குறையை கூற என் ஆபீசுக்கு வந்த வக்கீல் ராக்கனும் முனிசிபல் சேர்மனை நோக்கி அடிக்க சென்றார், நான் பாய்ந்து மல்லுக்கட்டி அவருடன் பக்கத்து அறையில் உருண்டதுமே அவர் தெளிந்து “விட்டுருங்க சாரு நான் போயிடறேன்?” என்று போகும் போது அவர் அடிக்க வந்தவர் பக்கம் பார்க்காமலே போய்விட்டார். இன்றும் என் சகோதரி அந்த மல்யுத்தத்தை சொல்லி கேலி செய்வார்.

ANGER MANAGEMENT என்ற ஆத்திரததை அடக்கும் முறை ஒரு தனிப்பாடமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்க பட வேண்டும். இதனால் நாட்டில் நடக்குன் 50% சதவிகித கொலைகள் தவிர்க்கப் படலாம். இது கோட்ஸேகளுக்கு செல்லாது.

ஆண்கள் செய்யும் அதே தவறை பெண்களும் செய்யும் அனுமதி பெண்களுக்கும் வரும வரை அதை சமத்துவம் என்று ஒப்புக் கொள்ள என்னால் முடியவில்லை. யாரோ என்னிடம் கேட்டார்கள்.ஆண்களுக்கு கற்பு கிடையாதா? பெண்மேல் ஒரு ஆணை கற்பழித்த குற்ரம் சாட்டமுடியுமா? என்று…

ஒரு ஆணின் கற்பு அழிக்கப் பட்டதற்கு பெண் மந்திரி செய்திருந்தால்….? அதுதான் உதாரணம்

முந்தைய கட்டுரைஅழியும் சித்திரங்கள்
அடுத்த கட்டுரைஇணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன்