அன்புள்ள ஜெ
நண்பர் ஒருவரின் அறிமுகத்தில், தஞ்சாவூர் அருகில் உள்ள பாகவத நிகழ்ச்சி சென்றேன்.
பிரஹலாத சரிதம் – அந்த ஊரில் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் பாத்திரமேற்று நடத்து ஒரு இசை நாடகம். இரவு 1030க்கு ஆரம்பித்து காலை 330 வரை. குளித்து விட்டு பின் 4லிருந்து 6 வரை. 530 மணிக்கு நரசிம்ம அவதாரம்.
முழுவதும் ‘சுந்தர’ தெலுங்கினில் – மிகவும் ரசித்தேன். அனைவரும் ஆண்களே- லீலாவதி முதல். பல சுவாரசியமான துணுக்குகள் – கிட்டத்தட்ட 400 வருட பாரம்பரியம்.. தரமான கர்னாடக இசை. செட் அதிகம் இல்லை – நல்லவேளை !. வெகுநாட்கள் லீலாவதியாக இருந்தவர்தான் இப்போது ஹிரண்ய கசிபு.
நரசிம்மர் வெளி வரும் காட்சி – மிக எளிமையாக – புஸ்வானம் மற்றும் சிறு வெடிகளை கொண்டு. தனி அழகு.
அவ்வப்போது சிற்றுண்டிகள் – பார்வையாளர்கள் இளைப்பாற – இரண்டாம் பகுதி – நீண்ட 500 அடி நீளத் தெருவே மேடையாக – ப்ரஹ்லாதனும் ஹிரண்யகசிபும் நரசிம்மரும் ஓடி ஓடி நடித்துக் காட்டினார்கள்.
தூரத்தில், அந்த ஊர் பெருமாள் – இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டே.
நரசிம்மருக்கு ஒரு முகமூடி – அதுவே நரசிம்மர் போல – அதற்கு பூஜை செய்து பின் பாத்திர பிரவேசம்- ஹிரண்யகசிபு வதத்திற்கு பின் – அந்த முகம் – கோவிலில் வைக்கப் படுகிறது. அடுத்த வருடம் வரை.
இதே போல – நடத்தப் படுவது மெலட்டூர் பாகவதம் – சற்று பிரபலமானது. சாலியமங்கலத்தின் விசேஷம் – நாம்தான் அங்கு செல்ல வேண்டும். அந்த நாடகம் வராது. வேறெங்கும் செல்லாது
இது போல் ஆறு இடத்தில் பாகவத மேளா நடை பெறுகிறதாம். – சூலமங்கலம் உட்பட – அனைத்தும் தெலுங்காம்.
மெலட்டொரில் இருந்து வந்த கலைஞர்களும் வந்திருந்தனர்.
பெருமையாகவே இருக்கிறது. என்னே ஒரு செல்வம்.!
மனமார நன்றி கூறி விடை பெற்றோம் – நானும் ரஞ்சனியும்
6:00 நிமிஷத்திலிருந்து – அவசியம் பார்க்கலாம்
உங்கள் பார்வைக்கு
http://www.bhagavathamela.com/
அன்புடன்
முரளி