உன்னதம் இருவகை

ஆசிரியருக்கு,

இக்கதை தனக்குள் பல்வேறு அடுக்குகளை கொண்டுள்ளதைக் காண்கிறேன், ஒரு சிறுகதை படித்தவுடன் வளரத் துவங்க வேண்டும். இது வேர்களாக பரந்து பரவுகிறது, நினைவில் இருந்து மேலும் மேலும் வாசித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

உன்னதம் இருவகைப் பட்டது, முதலாவது பெரிதும் அகவயமானது, அவை நம்மிடம் தன்னியல்பாக உள்ள மனித மேன்மைகளான தாய்மை, கருணை, பெருந்தன்மை போன்றவை. வெளிப்படும் தருணத்தில் அதை தரிசிக்கலாம்.

இரண்டாவது பெரிதும் புறவயமானது, நாம் ஆவது மட்டும் ஆக்குவது. அவை வலுவான, அமைப்பான உடல், தாங்கும் திறன் அதிகரித்துக்கொள்ளுதல் மற்றும் சிற்பம் ,ஓவியம், இசை போன்ற படைப்புச் செயல்பாடுகள். இவை ஓரு உயர்வு நிலையை நோக்கிச் செல்லும்.

முதலாவது பண்பு, இரண்டாவது வடிவு.

ஆனால் வடிவை அடையும் வழியில் நாம் பண்பை இழந்து விட நேரிடலாம். சில கலைஞர்கள் குருபிகளாக இருப்பதைக் நாம் கண்டுள்ளோம், தன்னிறைவை நோக்கிச் செல்லும் சமூகம் பொருள் மைய்ய (materialistic) சமூகமாக ஆவதை நாம் காண்கிறோம். இரண்டாவது வகை உன்னதமாக்கல் அது நிகழும் பாதையில் முதலவது வகை உன்னதத்தை உதறிவிடுவதை நாம் பார்க்கிறோம்.

இங்கு தான் –

“அவளால் பிள்ளைபெற்றுக்கொண்டு முலையூட்ட முடியாது. அவை வெறும் அலங்காரப்பொருட்கள்.”

என்கிற வாக்கியம் மிக்கக் கூர்மையானது . இதற்குப்பின் இவ்வளவும் உண்டு. நமது தெரிவு எது ? இரண்டையும் தக்கவைத்துக் கொள்ளுதல் எப்படி ?

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்