பெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1

அன்பின் ஜெ,

எனக்கு பிடித்த வடிவம் எப்பொழுதும் சிறுகதை.பெரியம்மாவின் சொற்கள் நல்ல வாசிப்பனுபவம்.பொதுவாக எல்லா எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வாசித்திருப்பேன்.

உங்களின் படுகை,கிடா,வெண்கடல்,தாயார் பாதம் ,மயில்கழுத்து ,போதி உச்சவழு போன்றவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை.

பெரியம்மாவின் சொற்கள் அந்த வரிசையில் முதலில் வரும்.சொற்களின் அர்த்தத்தைக் கூறுவது போல வரும் ஒவ்வொரு வார்த்தையின் நுட்பமும் உணர்ந்து வாசிக்கக்கூடியவை.kind ஆன ோழியும்,அருஞ்சுனையும்,பக்கீரும்.,அவர்களே beautifulஆக பெரியம்மைக்குத் தெரிவதும் classic touch.

பொதுவாக வட்டார வழக்குகளிலும்,மொழிகளிலும் எனக்கு ஈர்ப்பு ,எனவே பெரும்பாலான சொற்களுக்கு நானறிந்த மொழிகளில் இணைசொற்கள் தேடுவது என் வழக்கம்.அதனால் இச்சிறுகதை எனக்கு இன்னும் நெருக்கமாகிறது.தமிழ்,ஆங்கிலம்,தவிர பேசுவதற்கு மலையாளம்,உருது,கொஞ்சம் தெலுகு,கன்னடம் எல்லாம் எனக்குத் தெரியும் .எனவே சொற்கள் எனக்கு எப்பொழுதும் மகிழ்வானவை.

சீதை பற்றி எப்பவும் sorry என்று பெரியம்மா கூறுவது மிக நுட்பம்.அவளுக்கு வாச்ச வாழ்வு அப்புடி என்பது நம் வீடுகளில் ஏதாவது ஒரு பெண்ணைப்போல சீதையை எண்ணுவதன் அழகியல். ட்ராய் கதையைக்கூறி ஹெலன் பற்றி பெரியம்மா பஞ்சாலியில்ல என்பது எத்தனைச் சரி.இது மேலோட்டமாக virginity,piety என்றெல்லாம் தோன்றினாலும் அதில் கூறப்படுவது பெரியம்மையின் வாழ்வாக அல்லது அவள் கண்ட கனவாக இருக்கும் என்பதே என் புரிதல்.

அத்தனை பெரிய அரமணையும் அவ்வளவு சொத்தும் கொண்ட அவள் வாழ்வே பெரிய வார்த்தை தான்.அவள் அனுபவத்தில் இதைப் போல எத்தனை mannersஐப் பார்த்திருப்பாள்.பேத்தியின் வாழ்வு அவளுக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை.இயல்பாக அதை ஏற்கிறாள். அவள் வாழ்வில் அடையாத விடுதலையாக பேத்தியின் வாழ்வு அவள் முன்னே.

எனக்குத் தோன்றியது அத்தனைப் பெரிய வீட்டில் அவள் சீதை மாதிரியே இருந்திருக்கிறாள்.காரில் அவள் மண ஊர்வலம் வந்தது மட்டுமே ,மற்ற பொழுதெல்லாம் உள்ளேயே இருந்திருப்பாள்.பாஞ்சாலி,குந்தியின் வாழ்வு அவளுக்கு மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் விதி அதுதான் sorry.

அமெரிக்கா செல்வதே அவள் பயணம்.ஆனால் அந்த ஊரில புடிச்ச ஆம்பளயோட கட்டிக்கிட்டு மானம் மரியாதயோட சந்தோசமா இருப்பாளுக எனபது அவள் destination.

பெண்ணின் மன நுட்பங்களாகவே நான் புரிந்து கொள்கிறேன். பொமகிரேனட்,பனானா,மேங்கோ,self என்று நிறைய இடங்கள் அவ்வாறே புரிந்து கொள்கிறேன். bond என்பதை தெய்வம் நமக்குக் கொடுப்பது,நாம தெய்வத்துக்குக் கொடுப்பது என விவரிப்பது அழகான இடம்.திருச்செந்தூர் முருகன் அருளைப் பெரியம்மை கூறுவது அற்புதமானது.மிக உயர்வான கதை.

ஒரு கணத்துக்கு அப்பால் கதை எனக்கு அந்த அளவிற்கு ஈர்ப்பில்லை.உளவியல் சார்ந்த கோணத்தில் நன்றாகவே இருந்தது. இதன் உச்ச உணர்வுகளை நீலம்,பிரயாகை போன்றவற்றில் வாசித்து உணர்ந்ததால் அப்படித் தோன்றுகிறது என எண்ணுகிறேன்.இருந்தாலும் நல்ல கதை.

நன்றி
மோனிகா மாறன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10
அடுத்த கட்டுரைஅவஸ்தே