ஜீவ காருண்யம்

ஆசிரியருக்கு,

“கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது மனிதனிடம் உள்ள ஜீவ காருண்யம் (compassion) என்பது பற்றி.

முதலில் இருந்தே கரடி பணிவானது, முதலாளிக்கு மரியாதையை அளிப்பது, இடும் ஆணைகளுக்கு ஒத்துழைப்பது, தன்னை மாற்றிக்கொள்ளக் கூட ஏற்பது, இறுதியில் கிட்டத் தட்ட மனிதனாவது என படிப்படியாகக் காட்டப் பட்டிருக்கிறது.

அதே சமயம் முதலாளிக்கு கரடியைத் தவிர பிற சர்க்கஸ் ஊழியர்களிடம் இரக்கமில்லை. ஒட்டுமொத்த சர்க்கஸும் அவருக்கு ஒரு விலங்கு, அதற்கு அவர் தான் ரிங் மாஸ்டர்.

இறுதியில் கரடி கொல்லப்படும் போது மனம் கனக்கிறது. கூண்டுக்குள் ஒடுங்கி இருக்கிறது, அழைத்ததும் வந்து வணங்குகிறது, மெளனமாக தனது இறுதியை பெற்றுக் கொள்கிறது.

இக் கரடியின் இறப்பை ஏன் நாம் ஒரு குழந்தையுடைதுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம், அது மனிதனைப் போன்றது என்பதால் தான். மனிதனின் ஜீவ காருண்யம் மனிதன் வரையில்.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8
அடுத்த கட்டுரைஎப்படி இருக்கிறேன்?