அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு,
இன்று திருநீறு அணிவது உடலின் நிலையாமையை தொடர்ந்து நினைவில் வைத்திருக்க உதவும் சாதனமாக தத்துவார்த்த அடிப்படையில் விளக்கப்படுகின்றது.
தென்சூடானின் டிங்கா பழங்குடியினர் பற்றிய அருமையான படங்கள் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரை திருநீற்றின் ஆரம்பம் மனிதப்பயன்பாடு கருதியே உருவாகி இருக்கக்கூடும் என்பதை காட்டுகின்றது.
http://tekey.net/b/en/dinka-nilotic-ethnic-from-sudan/
‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே’
என்று மாணிக்கவாசகர் கூறுவதையே திருநீறும் எடுத்துவந்திருக்கின்றது.
சிவேந்திரன்