பிரயாகை செம்பதிப்பு அனுப்பப்பட்டுள்ளது

அன்புள்ள ஜெயமோகன்,

பிரயாகை (செம்பதிப்பு) முன்பதிவு செய்தவர்களுக்கு இன்று (6-5-2015) புத்தத்தை அனுப்பி இருக்கிறோம். இந்தியா முழுவதிலும் உள்ளவர்களுக்கு ப்ரொஃப்ஷனல் கூரியர் மூலம் புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறோம்.

சென்னையில் இருப்பவர்களுக்கு இரண்டு நாள்களுக்குள்ளும் (அதாவது மே 8ம் தேதிக்குள்),

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு 3 நாள்களுக்குள்ளும் (அதாவது மே 9ம்தேதிக்குள்)

மற்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு 4 முதல் 7 நாள்களுக்குள்ளும் (அதாவது மே 13ம் தேதிக்கு முன்பாக) புத்தகம் கிடைக்கும்.

இந்தக் குறிப்பிட்ட காலவரையில் புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

அன்புடன்
பிரசன்னா

முந்தைய கட்டுரைசேகர் நினைவுகள்
அடுத்த கட்டுரைதமிழ் மின்னிதழ்2