அன்புள்ள ஜெ
andrei tarkovski இன் கூற்று நினைவிற்கு வருகிறது. பேருண்மை, தன் அனுபவத்திற்கு அருகே உள்ளது. (சரியாக மொழி பெயர்ந்து இருக்கிறதா தெரியவில்லை – Universal truths are much closer to one’s personal experiences ). உங்கள் அனுபவங்கள், எங்களது அனுபவத்தை தூண்டி, இணைந்து, பிரிந்து, வலை பிண்ணி, மானுடத்தை துகளாகவும், அதே நேரத்தில்,துகளினைந்த பரப்பாகவும் (discrete and continuous at the same time) ஒரு உணர்வு. அதிலேயே நிற்க வேண்டும் என ஒரு ஆசை. (I guess, I am complimenting you).
மேலும் இரண்டு கூற்று – ஒன்று – ஆல்பர்ட் காமு வினுடையது – இலையுதிர் காலம் என்பது இரண்டாம் வசந்தம் – இலைகள் மலர்களாக உதிரும் –
நினைவு கூர்தலை இரண்டாம் வசந்தமாக்கி உள்ளீர்கள்.
இரண்டு – ஜப்பானிய கூற்று – உதிரும் சருகுகள் காற்றை வெறுப்பதில்லை – falling leaves do not hate wind –
இயற்கையின் நிகழ்வகளில் ஒரு வித அமைதியும், புன்னகையுமாக விரியும் அனுபவங்கள்…
குழந்தைகளின் சொல்லாட்சிகளில் ஒரு புத்தகமே எழுதலாம். எங்கள் வீட்டு வைஷ்ணவி (6 வயது) – தன் தங்கைக்கு வந்த ஜுரத்தில் கூறியது – ‘காபி மாதிரி ஒடம்பு சுடறது – போய் படுத்துக்கோ’ – மழலையுடன். தஞ்சாவூர் அருகே பல சிவலிங்கங்களில் ஒன்று மிக மெல்லியதாக – உயரமாக – அதற்கு பெயர் – ‘ ஐ! ஒல்லி சிவன்’ – ஒரு மெலிந்த சிவனை தரிசித்த புன்னகை – கேட்டவரின் முகமெங்கும்..
உங்கள் எழுத்துகள் – சில இடங்களில் புகைப்படமாக.. சில இடங்களில் சிறும்படமாக (short takes), பல இடங்களில் – வாக்கியங்களாக – படித்து, அசை போட்டு மகிழ…
கொஞ்சம் பொறாமை – எங்களுக்கும் இப்படிதானே நிகழ்ந்தது. ஆனால் இவ்வாறு எழுத முடியுமா?
கொஞ்சம் சமாதானம் – இவைகளை எழுதவும், எழுத்துக்கள் மூலம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு எழுத்தாளர் உள்ளார்.
கடைசியாக – பல நேரங்களில் –
(குழந்தைகளுடன் நேரம் கழித்தல், புத்தகம் படித்தல், தேநீர் செரிமோனி, வான் நக்ஷத்திரங்களை பார்வையிடல், என்று பல லௌகீகங்கள்)
இச்சுவை தவிர யான் போய் – இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் – அரங்கமா நகருளானே.
என தோன்றும் –
அன்புடன்
முரளி
அன்புள்ள முரளி
உங்கள் கடிதம் நல்ல தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் தமிழ் எழுத்த்நுஅடை அபாரமாக முன்னேறிவருகிறது. தொடர்ச்சியாக நீங்கள் நிறையவே எழுதலாமென எண்ணுகிறேன்.
சின்னஞ்சிறு விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பெரிய விஷயங்களை அறொஇய முடியும் என்பது ஒரு அடிபப்டை வேதாந்த பாடம். நித்யா சிறு வயதில் நடராஜகுருவின் மாணவராக சென்றபோது ஒருமுறை குரு அவியல் வைக்கச் சொன்னாராம். சமையல் தெரியாது என்றார் நித்யா. ”ஒரு நல்ல அவியல் வைக்கத்தெரியாதவனுக்கெல்லாம் என்ன அத்வைதம் புரியப்போகிறது?”என்றார் நடராஜ குரு.
இன்னொரு சந்தர்ப்பத்தில் நித்யாவின் நண்பர்களுடன் அவர் தத்துவ விவாதம் புரிந்துகொண்டிருந்தார். மிக சீரியஸான விவாதம். நடராஜகுரு தூரத்தில் வந்து நின்று” என்ன பேசுகிறீர்கள் ?”என்றார். ”கார்ல் ஜாஸ்பெர்ஸ் பற்றி குரு” என்றார் நித்யா.” யாருமே சிரிக்க காணவில்லையே, என்ன தத்துவம் பேசுகிறீர்கள்? ”என்று சலித்துக்கொண்டு குரு திரும்பிச் சென்றுவிட்டார்
ஜெ
Sir,
கருத்துக்கள் சொல்லும் அளவு கற்காவிட்டாலும் உங்கள் எழுத்தாற்றலுக்கு வணக்கம் தெரிவிக்க மனம் விழைகிறது. ஒரு தாயாக என் குழந்தைகளைக் குளப்பாட்டிய நாட்கள் நினைவில் மனம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.
வணக்கம்.
வெற்றிமகள்.
***
Sir,
கருத்துக்கள் சொல்லும் அளவு கற்காவிட்டாலும் உங்கள் எழுத்தாற்றலுக்கு வணக்கம் தெரிவிக்க மனம் விழைகிறது. ஒரு தாயாக என் குழந்தைகளைக் குளப்பாட்டிய நாட்கள் நினைவில் மனம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.
வணக்கம்.
வெற்றிமகள்.