ஜெ
உங்கள் மகாபாரத மறுபுனைவு சரியில்லை என்றும் தேவையில்லை என்றும் ஒரு நண்பர் சொல்லிக்கொண்டிருந்தார். சரிதான் அவருக்கு வேறு ஒருதரப்பு இருக்கிறது என்று நினைத்தேன். ‘மறுபுனைவாக எழுதவே கூடாதா?’ என்று கேட்டேன். எழுதலாம் என்றும் ஆனால் முற்போக்காக எழுதவேண்டும் என்றும் சொல்லி இரு கதைகளின் இணைப்புகளை அனுப்பியிருந்தார். வாசியுங்கள்
இப்படித்தான் மகாபாரதம் மறுபுனைவாக வந்துகொண்டே இருக்கிறது. இவர்களுக்குப்பிரச்சினை என்றால் அது தன்னுடைய classical grandeur ருடன் செய்யப்படுவது மட்டும்தான். இரண்டுகதைகளையும் வாசித்து சிரித்து மாளவில்லை. அதிலும் சுகிர்தராணியின் கதையில் உள்ள கிளாஸிக்கல் நடையை எத்தனை முறை வாசித்தாலும் திகட்டவில்லை
சுந்தரம்