சுஜாதா அறிமுகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் சித்ரன் ரகுநாத் என்கிற பெயரில் பல வருடங்களாக பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் சிறுகதைகள், பதிவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
ஆனால் உங்கள் வலைப்பதிவில் சுஜாதா விருதுகள் குறித்த பதிவில் கேள்வி கேட்டிருக்கும் சித்ரன் என்பவர் நானல்ல.
ஆனால் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள்தான் அந்தக் கேள்வியைக் கேட்டீர்களா என்று கேட்க ஆரம்பித்தபோதுதான் இது எனக்குத் தெரியவந்தது.
சமீபத்தில் மணல்வீடு என்கிற சிற்றிதழிலும் சித்ரன் என்கிற பெயரில் ஒரு சிறுகதை வெளியாகியிருந்தது. அதுவும் நான் எழுதியதல்ல. அது ஒரு வேளை இவராக இருக்கக்கூடும்.
இந்தச் சித்ரன் யார் என்று தெரிவிக்க முடியுமா? பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த விவரங்களைக் கேட்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
சித்ரன் ரகுநாத்
http://chithran.com
அன்புள்ள சித்ரன்
அந்த மின்னஞ்சல்முகவரியை அனுப்பியிருக்கிறேன். அது வேறு ஒருவர்.
நீங்கள் அடையும் பதற்றம் இந்த நாளின் மகிழ்ச்சிகளில் ஒன்று
ஜெ