ஊட்டி காவிய முகாம் அறிவிப்பு

நண்பர்களே,

குரு நித்யா ஆய்வரங்கு என்ற பேரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் இந்த வருட ஊட்டி இலக்கிய முகாம், மே மாதம் 22-24 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. ஊட்டியில் உள்ள நாராயண குருகுலத்தில் கூடுகைகள் நடைபெறும்.

முகாமில் மூன்று நாட்களுக்குமான உணவு, தங்குமிடம் மற்றும் நிர்வாக செல்வு உட்பட பங்கேற்பாளர்களுக்கான கட்டணம் ரூ.2000/-. அதிகபட்சம் 60 பேர் மட்டுமே தங்க வசதி உள்ளது. வழக்கமாக தொடர்ந்து ஊட்டி முகாமிற்கு வரும் நண்பர்கள் மட்டுமே ஐம்பதிற்கும் மேல். ஒவ்வொரு வருடமும் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போகிறது. ஆகவே முதலில் பதிவு செய்பவர்களுக்கே வாய்ப்பளிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

முகாமிற்கு வரவிரும்புவோர் ரூ.2000/- த்தை முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு, தங்கள் பெயர், ஊர் , மொபைல் எண் போன்ற விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பதிந்து கொள்ள வேண்டுகிறோம்.

வழக்கம் போல் ஊட்டி முகாமிற்கான பொது விதிகள் இம்முறைக்கும் பொருந்தும். பெயர் பதிவு செய்து விட்டு முகாமிற்கு வராதவர்கள் மீண்டும் வேறு எந்த விஷ்ணுபுர முகாமிலும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப் படாது.

இவ்வருட முகாமின் சிறப்பு நிகழ்வாக ஜெயகாந்தனுக்கான ஒரு சிறப்பு அமர்வு அமையும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் வெளியிடப்படும்.

விழா ஒருங்கிணைப்பாளர் வங்கிக் கணக்கு விவரம்:

R.Vijayaragavan,
AC.No. 31839314888
Ifsc: SBIN0012780
Bank: SBI
Branch: Moolapalayam
Amount: Rs.2000/-

மேலும் விவரங்கள் மற்றும் முகாம் தொடர்பான உதவிகளுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் ஈரோடு விஜயராகவன் (98430-32131) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

பங்கேற்பாளர் விண்ணப்பப் படிவம் : http://goo.gl/forms/t8vEsBmsyz


ஊட்டி சந்திப்பு குறித்து, நிபந்தனைகள் விளக்கங்கள்
============================================

ஊட்டி சந்திப்பு மேலும் நிபந்தனைகள்

முந்தைய கட்டுரைஞானயோகமும் விவாதமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 80