ஜெ,
நீங்கள் சிறுபான்மையினர் மீது வெறுப்பைத் தூண்டுகிறீர்கள் என அ.மார்க்ஸ் எழுதிய குறிப்புக்கு உங்கள் எதிர்வினையை வாசித்தேன். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்தக்கட்டுரையை வாசிப்பதற்கு ஒருநாள் முன்னர் நான் இணையத்தில் வந்த ஒரு விவாதம் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ‘ஜெயமோகன் பிராமணர்களுக்கு எதிரானவர். கிறிஸ்தவக் கைக்கூலி. கிறிஸ்தவ அமைப்பில் இருந்து பணம்பெற்றுக்கொண்டு வெள்ளையானை நாவலை எழுதி அதில் பிராமணர்களை இழிவுசெய்தவர்” என்று வாதிட்டார். பி.ஆர். மகாதேவன் எழுதிய ஒரு நீளமான கட்டுரையையும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையையும் எனக்கு அனுப்பிவைத்தார். நான் அவற்றை இன்னமும் வாசிக்கவில்லை.
அவர் நீங்கள் பணம் பெற்றுக்கொண்டு எங்கும் செல்லக்கூடியவர் என்று சொன்னார். முஸ்லீம் அமைப்புடன் இணைந்து சொல்புதிது இதழை நடத்தினீர்கள் என்று ஆதாரம் காட்டினர். விஷ்ணுபுரம் பிராமணர்களை தூஷிக்கிறது என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காடு நாவலில் மலையாளிகள் இழிவாகச் சொல்லப்பட்டிருக்கிறர்கள் என்று எழுதப்பட்டதை வாசித்திருக்கிறேன். மலையாள வெறியர் ஒட்டுமொத்த தமிழர்களை வெறுப்பவர் என்றும் வாசித்திருக்கிறேன்.
இத்தனை முத்திரைகள் வழியாக உங்களை அணுகுவது உண்மையிலேயே சிரமமானது.வாசித்தால் தெளிவு வரும் என்பது உண்மை. ஆனால் வாசிக்காமலேயே முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. அதோடு முன்முடிவுடன் வாசிக்கும்போது வெறும் வெறுப்பு மட்டுமே உருவாவதையும் நான் கண்டிருக்கிறேன். இதை எதிர்கொள்வது எளியவிஷயம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். இதற்கு நீங்கள் பதில் சொல்லியாகவேண்டும் என்றுதான் தோன்றுகிறது
சாமிநாதன்
அன்புள்ள சாமிநாதன்,
பதில் சொல்வது எளிதல்ல. பதில்கள் மீளமீள சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் வாசிப்பவர்களிடம்தானே அவை சென்றடைய முடியும்?
ஒன்று சொல்கிறேன். சென்ற இருபதாண்டுக்காலமாக நான் இந்துத்துவன் என முத்திரைகுத்தப்பட்டிருக்கிறேன். இன்று இந்துத்துவம் அதிகாரத்திற்கு வந்தபின்னரும் நான் அப்படியே அதேவகை விமர்சனங்களுடன் இருந்துகொண்டிருக்கிறேன்
என்னை அன்று இந்துத்துவ முத்திரை குத்தி வசைபாடியவர்கள் பலர் இன்றுள்ள அரசின் செல்லப்பிள்ளைகளாக அதிகார வளையங்களுக்குள் சென்றிருக்கிறார்கள். பலர் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜெ
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
மந்திர மாம்பழம்
இஸ்லாம் அவதூறுகள் மிரட்டல்கள்
எனது இந்தியா
மதமும் பூசகர்களும்
கிறிஸ்தவப்பாடல்கள் கடிதங்கள்