எம்.டி.முத்துக்குமாரசாமி அவருக்குப்பிடித்த நூறு நாவல்களை பட்டியலிடுகிறார். முதல் ஏழு நாவல்கள் இதிலுள்ளன. தமிழ் வாசகப்பரப்பில் இது ஒரு முக்கியமான முயற்சி என எண்ணுகிறேன். என்னுடைய வாசிப்பு என்பது எவ்வளவு குறுகியது என இந்த சிறிய பட்டியலே காட்டுகிறது. இந்த ஏழில் நான் வாசித்தவை இரண்டுதான். நபக்கோவின் Ada மற்றும் பெரெக்கின் Life A User’s Manual. முதல் நாவல் எனக்குப்பிடிக்கவில்லை. இரண்டாவது நாவல் மிகவும் சிரமப்பட்டு வாசித்தது. ஆனால் பிடித்திருந்தது.
முன்பு விமர்சனக்குறிப்புகள் எழுதும்போது தமிழில் வாசிக்கக்கிடைக்காத நாவல்களைப்பற்றி எழுதுவதில்லை என்ற வரையறையைப்போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது இவற்றைப்பற்றிய என் கணிப்புகளை எழுதலாமென்று நினைக்கிறேன். ஆனால் விமர்சனக்குறிப்புகள் எழுதுவது கோரும் கடுமையான உழைப்பு அச்சுறுத்துகிறது. எம்.டி.எம்மின் ரசனையில் புனைவை ஒரு விளையாட்டாகக் காட்டும் முறைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. அவரது குறிப்புகள் முக்கியமானவை என்று நினைக்கிறேன்