ராமானுஜரும் மு.க.வும்

images

ஜெ

நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா?

ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும்.

ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே.

வாலி எழுதியதனால் தமிழகத்துக்கு ஒன்றும் ஆகவில்லை. இதுவும் ஒன்றும் செய்யாது.யூனியன் கார்பைட் வெடித்தபின்னும் போபால் இருக்கத்தானே செய்கிறது?

*

சீரியஸாகச் சொல்லப்போனால் ராமானுஜரைப்பற்றி அதிதீவிர வைணவ அறிஞர்கள்கூட ஒற்றைப்படையாகவே எழுதமுடியும். அத்வைதத்தை மட்டம்தட்டாமல், அன்றைய மதமோதலை தத்துவவிவாதமாகப் புரிந்துகொண்டு எழுதும் மனவிரிவு ஆசாரமான வைணவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் எழுதியவையும் இன்றையசூழலில் அர்த்தமற்றவைதான்

அதற்கு நவீன சிந்தனைகளுடன் அறிமுகமும் இந்திய தத்துவ மரபுகளில் கல்வியும் கொண்ட எவரேனும் எழுதவேண்டும். இந்திரா பார்த்தசாரதியின் ராமானுஜர் நாடகம் குறிப்பிடத்தக்கது. விரிவாக எழுதவேண்டுமென்றால் இன்றையசூழலில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைசினிமாவின் பாரி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64