திருவண்ணாமலையில் பவாசெல்லத்துரையுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தபோது சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளைப்பற்றிச் சொன்னார். அவற்றை நான் படித்திருக்கவில்லை. உடனே படித்துப்பார்த்தேன். இரு சிறுகதைகளை சமீபத்தில் தமிழில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களாக நினைக்கிறேன். அவளுடைய வீடு, உனக்கு 34 வயதாகிறது.
எளிமையான நேரடியான கதைகள். ஆனால் நேரடியாகச் சென்று மானுடத்துயரத்தைத் தொட்டுவிட இக்கதைகளால் முடிந்திருக்கிறது. திரும்பத்திரும்பச் சொல்லப்படும் தனிமை, புறக்கணிப்பு, ஏக்கம்தான் கருப்பொருள். ஆனால் வைரத்தை திருப்பிப்பார்த்து தீராது என்பது போல உண்மையான வாழ்க்கைச்சிக்கல்களை எத்தனை கோணங்களில் எத்தனை வடிவங்களில் எத்தனை முறை எழுதினாலும் தீராது என்று காட்டுகின்றன இக்கதைகள்
உனக்கு 34 வயதாகிறது ராமகிருஷ்ணன் தளத்தில்
ஜெ