19 ஆவது படி

கீழ்க்கண்ட செய்தியை ஓர் இணைய இதழில் கண்டேன். நீங்கள் 19 ஆவது படியின் தமிழ் வடிவத்தை எழுதுவதாக இருந்தது. ஆகவே இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். உங்கள் கருத்து என்ன?

எஸ்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-29-27/2009-04-21-23-03-21/7217-storey-director

அன்புள்ள எஸ்.

19 அவது படி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பல வடிவம் கண்டது. பலமுறை படமாக்க முயலப்பட்டது. கடைசியாக பரத் பாலாவுக்காக அதன் தமிழ் வடிவை நான் எழுதினேன். கதையை நான் திருவிதாங்கூர் பகுதிக்குக் கொண்டு வந்தேன். அது ஒரு மிகச்சிறந்த திரைக்கதை என்று நினைக்கிறேன். அதை வால்ட் டிஸ்னி தயாரிப்பாளர்கள் தயாரிப்பதாக இருந்தது. அது பலகாரணங்களால் கைவிடப்பட்டது. இந்த செய்தி குறித்து ஒன்றும் தெரியவில்லை. பொதுவாக ஒரு கதைக்கருவை நெடுநாள் வைத்திருப்பது கடினம்

ஜெ

முந்தைய கட்டுரைசாதி பேசலாமா?
அடுத்த கட்டுரையோகமும் ஆயுர்வேதமும்