அன்பின் ஜெமோ,
மிகப்பெரும் சுற்றுச்சூழல் நாசச் செயலான ‘பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை? இந்தியாவில் அதுபோல் நிகழ வாய்ப்பில்லையாமா? காடுகளின் காதலனாகிய நீங்களோ, அல்லது சுற்றுச் சூழல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரனோ இது பற்றி அங்குள்ளவர்களுக்காக எழுதலாமே. நாளொன்றுக்கு ஐந்தாறு பேர் வந்து முப்பது வினாடிகள் இருந்து போகும் என் போன்றவர்கள் செய்யும் பதிவுகள் எந்தத் விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் போவதில்லை.
http://baski-lounge.blogspot.com/2010/05/blog-post_16.html,
http://baski-lounge.blogspot.com/2010/06/blog-post_14.html
http://www.huffingtonpost.com/news/bp-oil-spill
நன்றி – பாஸ்கரன்
அன்புள்ள பாஸ்கர்
நான் அத்துறையில் ஒரு வாசகன் மட்டுமே. தியடோர் பாஸ்கரன் எழுதிவார் என நினைக்கிறேன்.
இந்தவகையான கருத்துச்செயல்பாடுகளில் எந்த முயற்சியும் பயனுள்ளதே. தமிழகத்தில் சூழியல் சார்ந்த கருத்துக்களை ஈரோடு ஜீவானன்ந்தம் அவர்கள் முன்னெடுத்தபோது அதிகபட்சம் 250 பேர் தான் தொடர்பில் இருந்தார்கள். இன்று தமிழகத்தின் முக்கியமான கருத்துச்செயல்பாடுகளில் ஒன்று அது
ஊடகங்களை நாம் அறிவோம். தமிழ் ஊடகங்கள் எப்போதுமே பல விஷயங்களை முழுக்க மறைத்து வருவனவாக உள்ளன. தமிழ் ஊடகங்களில் எப்போதாவது ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இனவெறி உருவாக்கிவரும் பேரழிவு குறித்து ஒரு சொல்லேனும் வாசித்திருக்கிறீர்களா? இதுவும் அதே போன்றதே. இப்போது நம் ஊடகங்கள் அனைத்டும் – சிற்றிதழ்கள் உட்பட- அரசாங்கத்தின் பிடிக்குள் ஆழ்ந்து கிடக்கின்றன. அன்றாடம் துதிபாடுவதே செய்தியாக ஆகிவிட்டிருக்கிறது.
இங்கே எல்லா முக்கியமான செயல்பாடுகளும் மாற்றூச்செயல்பாடுகளாகவே இருக்கமுடியும்
ஜெ