நகைச்சுவை:கடிதங்கள்

ஐயா,

மாலை நேரத்து மயக்கம் மிக அழகாக வந்திருக்கிறது. சில காலமாக பகடி நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதாமல் இருந்தது குறித்த கேள்வி இருந்தது. அதை நீங்களும் மேடைப்பேச்சாளராகலாம் மற்றும் இக்கட்டுரை இல்லாமல் செய்துவிட்டது. சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

நான் ஒரு 20 வருடங்களுக்கு முன் திருச்சிக்குப் போயிருந்தபோது “எனக்கு மட்டும்” அதிர்ச்சிதரக்கூடிய விஷயம் ஒன்று நடந்தது. மாலை நாளிதழ்கள் பஜ்ஜி போண்டா எண்ணை எடுக்க மட்டும் அல்ல, பஜ்ஜி போடவே பயன்படுத்தலாம் என்பது தெரியவந்தது. திருச்சி தெப்பக்குளக்கரையோரம் தள்ளுவண்டியில் உடனடி பஜ்ஜி, போண்டா கடைகள் இருக்கும். அந்த காலத்தில் தெருவிளக்குகள் சாதா குண்டு பல்புகள் அல்லது ஒரு மெலிதான குழல்விளக்குகள் மட்டுமே. எனவே வெளிச்சம் கம்மி. அதற்காக கடைகளில் காடா விளக்கு என்னும் மண்ணென்னை விளக்கை வைத்திருப்பார்கள்.

வாதாவரணம் குளிராக இருந்ததால் சூடாக ஏதாவது சாப்பிடலாம் என்று ஒரு தெப்பக்குள கட்டைச்சுவர் கடைக்குப்போனேன். காத்திருக்கச்சொல்லிவிட்டு, ஒரு கயிற்றை பக்கெட்டில் கட்டி தெப்பக்குளத்திற்குள் இறக்கி நீர் மோந்தார். அதை அப்படியே கொட்டி மாவை கலந்தார். வாழைக்காய் சீவியதுபோலவே இருந்த மாலை பேப்பரை அந்த மாவில் நனைத்து பஜ்ஜி போட்டு எடுத்துவிட்டார். எனக்கு என்னமோ போலாகிவிட்டது. அந்த தெப்பக்குளத்தில்தான் பக்கத்து தெரு சாக்கடைகள் ஐக்கியமாகின்றது. போதாததற்கு மழை பெய்த புண்ணியம் தெருவைக்கழுவி அந்த நீரும் அப்படியே தெப்பக்குளத்தில்தான் விழுந்திருந்தது.

ஆனால் மற்ற வாடிக்கையாளர்கள், சர்வசாதாரணமாக பஜ்ஜியின் ஒரு முனையில் சிறிய துளையிட்டு அந்த பேப்பரை அப்படியே துளைவழியே உருவி எறிந்துவிட்டு “சூடான பஜ்ஜி” சாப்பிட்டனர்.நான் ஓடி வந்துவிட்டேன். மாலைமலர் பஜ்ஜி, மாலைமுரசு பஜ்ஜி போன்ற விலை குறைவான பஜ்ஜிகளும், தினமணி, தினத்தந்தி போன்ற சிறப்பு பஜ்ஜிகளும் உண்டென சொன்னார்கள். தின்றுவிட்டுப்போட்ட வாழைப்பழத்தோல்களிலும் பஜ்ஜிகள் போட்டிருக்கிறார்கள் என்று என் அண்ணன் சொன்னார். தப்பித்தவறி அந்தப்பக்கம் போய்விடக்கூடாது.வயிறு நமக்கு சொந்தமில்லை.

அந்த திருச்சி தெப்பக்குளத்து நினைவுகள் நிறையவே இருக்கின்றது.ஒரு முறை தீயணைப்பு வண்டி ஒன்று கரையில் நின்றிருந்தது. ஒரு படகு போன்ற ஒன்றை வைத்து இருவர் நடு மண்டபத்துக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நின்று பார்த்தபோது, நடுமண்டபத்திலிருந்து ஒருவரை கூட்டிவந்தார்கள். கரை சேர்ந்ததும் அவருக்கு கொஞ்சம் தர்ம அடி கிடைத்தது. என்ன விஷயம் என்று விசாரித்ததில், தற்கொலை செய்துகொள்வதற்காக இரவில் அவர் தெப்பக்குளத்தில் குதித்திருக்கிறார். அதுவே ஒரு அறிவீனமான செயல். தெப்பக்குளத்தை நம்பி இறங்குவது சரியான காரியமல்ல, பக்கத்திலேயே காவிரி இருக்கிறது, ஆனால் தண்ணீர் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அப்போது அவரை தெப்பக்குளத்திலிருந்த ஒரு முதலை துரத்தியிருக்கிறது. சுத்தமாக நீச்சல் தெரியாதபோதும் எப்படியோ கஷ்டப்பட்டு நீந்தி நடுமண்டபத்தில் ஏறி நின்றிருக்கிறார். மறுநாள் காலை வரை அங்கிருந்துவிட்டு, விடிந்ததும், காப்பாற்றுங்கள் என்று கத்தியதன் விளைவாக தீயனைப்பு வண்டி வந்து காப்பாற்றியிருக்கிறது.அந்த மனிதரின் முகத்தை இப்போது நினைத்துப் பார்த்தபோது அவர் சாகத் துணிந்தவராக தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு வாழ்கைமேல் பிடிப்பு வர அந்நிகழ்ச்சி மிகவும் உதவியிருக்கலாம்.

நன்றி

ராம்.

*** 

மதிபிற்கும், மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,தங்களுடைய சமீபத்திய பதிவான “மாலை நேரத்து மயக்கம்’ என்ற பதிவை படித்தேன். நகைச்சுவைஎன்ற பகுபின் கீழ் அதனை நீங்கள் இடுகை செதுள்ளீர்கள். அதனால் ரசித்தேன். இருபினும் நானும் ஒரு மாலை நாளிதழ் ஒன்றின் நிருபராக பணிபுரிகின்ற காரணத்தால் ஒரு சில விளக்கங்களை உங்களுக்குதெரிவிக்க விரும்புகின்றேன்.சென்னையிலிருந்து வெளிவரும் “மாலைச்சுடர்’ என்ற நாளிதழில் நான் நிருபராக பணிபுரிந்து வருகி .நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ஜல்சா, குஜால், அழகிகள், கற்பழிப்பு போன்ற உரிச்சொல்களை நாங்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து வருவதை ஒரு அறமாகவே பின்பற்றிவருகிறோம். இந்த செதிகள் எங்கள் பத்திரிகையில் இடம் பெற்றாலும் அதற்குரிய •க்கியத்துவம் ஒற்றை பாராதான்.மேலும் அதற்குரிய சொல்லாட்சிகளும் வேறு. ஒவேளை நீங்கள் நெல்லை, மதுரை ஆகியஇடங்களிலிருந்து வெளிவரும் மாலை நாளிதழ்களை மட்டும் படித்து இத்தகைய ஒரு டிவுக்குவந்திக்கக் கூடும். எங்களுடைய நாளிதழ் சென்னை பதிபாக மட்டுமே இருபதால் நீங்கள்வாசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கக் கூடும்.உள்ளூர் விஷயங்கள் •தல் உலக விஷயங்கள் வரை மற்ற பத்தி›கைகள் தொட மறந்த அல்லது தொடதயங்கும் விஷயங்களை தை›யாக தொடர்ந்து பதிபித்து வகிறோம். சமீபத்தில் அனைத்துளாக்குகளிலும் எழுதபட்டு ஆனால் பத்திரிகைகளால் தொடாமல் போன அமெரிக்க பொருளாதாரசரிவும், அதன் இந்திய பாதிபும் குறித்து தொடர்ச்சியாக ஒரு கட்டுரை எங்கள் நாளிதழில் எழுதபட்டு ருகிறது அதே போன்று இன்டர்நெட் உலகம் என்ற பெயரில் புதிய வகையான பயனுள்ள கணினிதகவல்கள் பரிமாறப்பட்டு வருகிருகிறது. அதே போன்று புத்தகங்கள் குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும்தொடர்ந்து செதிகளை வெளியிட்டு வருகிறது.ஆண்டுதோறும் நடக்கும் புத்தக கண்காட்சியை ஒரு ஆவணமாக, தொடர் பதிவாக செது வருருகிறது. அரசியல் சார்பு தன்மை இல்லாமல் நடுநிலையோடு ஆளும் கட்சியின் தவறையும், எதிர்க்கட்சிகள்செய மறந்த விஷயத்தையும் குறிப்பிட்டு பல்வேறு தலைப்பு செதிகளை வெளியிட்டு வருருகிறது. எதிலும் ஐயோ, குயோ என்ற ஒற்றை தலைப்பு வந்தது இல்லை.உங்களுக்கு மறுப்பு சொல்வதற்காக இதனை எழுதவில்லை. உங்கள் மீது மதிபு இருபதால் இபடியும்நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிக்கின்றன என்பதை தெரிவிக்கவே இந்த மடல். நீங்கள் சென்னைவரும் பட்சத்தில் ரூ.3 செலவு செது இதனை வாங்கி படிக்கலாம்; அல்லது www.maalaisudar.com

ஞிணிட்என்றஇணையதளத்தில் இலவசமாகவும் பார்த்து படிக்கலாம்.

இபடிக்கு

உங்கள் அதிதீவிர வாசகனும்,பத்திரிகை நிருபருமானக.

அரவிந்த் குமார்

(பின்குறிப்பு: சென்னையில் நடைபெற்ற “நான் கடவுள்’ பட துவக்க விழாவின் போது உங்களைசந்தித்து நான் பேசினேன். உங்களுக்கு நினைவிருக் வாய்ப்பு சற்று குறைவுதான் என்று நினைக்கிறேன்.அவ்வப்போது உங்களுடன் செல்போனிலும், எஸ்எம்எஸ்சிலும் தொடர்பு கொண்டவன் என்பதுஎன்னுடைய கூடுதல் தகுதி)

அன்புள்ள அர்விந்த்

உங்களை நினைவிர்ருக்காமல் இருக்குமா?

நீங்கள் சொல்வது உண்மை. நான் மாலைச்சுடரைப் படித்தது இல்லை. சமீபத்தில் தினகரன் குழுமம் வெளியிட்ட ஒரு மாலைநாளிதழ் மாலை முரசுவை சைவ இதழாக ஆக்கிவிட்டது என்றார்கள்

என்ன ஃபான்ட் இது?  unicode க்கு மாற்றுவதற்குள் என் குருவி மண்டை விண் விண் என்று தெறித்து விட்டது. இதைவிட ராஜ ராஜ சோழன் கல்வெட்டையெ படித்து விட்டிருக்கலாம்
ஜெ

****

 அன்புள்ள ஜெ,

சமீபத்தைய இரு நகைச்சுவை கட்டுரைகளும் நன்றாக வந்திருக்கின்றன. என்னைப்போன்ற வாசகர்கள் உங்கள் இணைய இதழில் இம்மாதிரியான எளிய கட்டுரைகளையும் படிக்க விரும்புகிறோம். அலுவலகத்தில் அமர்ந்து சிரிக்க முடியாமல் ஒரு சிகரெட்டைஎ டுத்துக்கொண்டு தனியறைக்குள் ஒதுங்கி தனியாக சிரித்து இருமினேன். நன்றி

செல்வ வினாயகம்

***

அன்புள்ள ஜெ,

மாலை நாளிதழ்களுக்கு இன்னொரு பயனும் உண்டு. அவை நன்றாக ஊறும்.  ஆட்டுக்கல்லில் வைத்து அரைத்து பிழித்து கூழாக்கி நல்ல பேப்பர் பொம்மைகள் செய்யலாம். நான் சிறுவயதில் நன்றாகவே செய்வேன்.பிள்ளையார் பொம்மை நந்தி பொம்மை எல்லாம் என்னுடைய ஃபேவரைட்

சுரேந்திரநாத்

முந்தைய கட்டுரைஆத்மாவும் அறிவியலும்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதீபாவளி