வெள்ளி காலை செந்தில் சென்னையிலிருந்து அழைத்து தானும் ராயும் கோவை வருவதாகவும் ,சனி யன்று கோவையில் நண்பர்களை சந்தித்துவிட்டு ,ஊட்டியையும் குன்னுர்ரையும் பார்க்கவிருபத்தாகவும் ,அதனால் என்னை புறப்பட்டு வர சொன்னார்.
சனி காலை 11மணியளவில் அரங்கா வீட்டில் ராயரை கண்டேன் . முதல் பார்வைக்கு லேசாக சுஜாதா சாயல் , முதல் கட்ட அறிமுகங்களுக்கு பிறகு தீவிர சம்பாஷனைக்கு இறங்கினார். ஆங்கிலேயர்களின் மனிதாபமற்ற வரி வசூல் முறைகளை பற்றியும் ,இந்தியர்கள் ராபர்ட் கிளைவ் பற்றி உண்மையான சித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் .
பின்பு எல்லோரும் புறப்பட்டு தியாகு புத்தக நிலையத்திற்கு வந்தோம் . அதை பற்றி சுரேஷ் விரிவாக சொல்லிவிட்டார் .அங்கு ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை பற்றி பேசும் பொழுது தனக்கு பிடித்தவர்களாக R .K .நாராயணன் & ரோஹின்டன் மிஸ்திரி ஆகியோர்களை சிலாகித்தார்.
அங்கிருந்து புறப்பட்டு மேட்டு பாளையம் வழியாக குன்னூர் வந்துசேரும் போதே ராயரின் இன்னொரு பரிமாணத்தை தெரிந்து கொண்டோம்.அவர் ஆசியாவில் இறந்த ஆங்கில ஆளுமைகளின் சமாதிகளை பற்றி ஆராயும் குழுவில் இடம் பெற்றுஇருந்ததையும் கூறியதால் ,நாங்கள் அதே குழுவின் அங்கத்தினரான தியோடர் பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் படி All saints church கு வழி விசாரித்து quail {கவுதாரி }சாலை என சரியான உச்ச ரிப்பில் கேட்டால் குன்னூர் வாசிகள் அது குயில் ரோடு சார் என திருத்தினார்கள் .சரிதான் என்று ஒப்புக்கொண்டு அங்கு சென்றோம் .
1851ல் கட்ட பட்டு மிகவும் அழகுற பராமரிக்கப்பட்டு வரும் தேவாலயம்,அதன் ஓரத்தில் பழைமையான சமாதிகள் இருந்தன. 1857 ல் யாரோ ஒரு கொலையாளியால் கொல்ல பட்டு இறந்த 85 வயது கர்னல் ஒருவரின் சமாதியை புகை படம் எடுத்துக்கொண்டு இருந்த போது 1857ல் தானே சிப்பாய் கலவரம் மூண்டது ,அதன் தொடர்ச்சியாக இந்த கொலை நிகழ்திருக்குமோ?என ராயரை சந்தேகம் கேட்டு குழம்ப வைத்தோம் .மாலையாகி விட்டதால் தங்க கொட நாடு போகும் வழியில் உள்ள long wood forest rest house என்னும் விடுதியில் இரவு தங்கினோம் .இது 1942ல் கடல் மட்டத்தில் இருந்து 6100அடி உயரத்தில் கட்டப்பட்ட அரசு கானக விடுதியாகும் .
இரவு உணவின் போது தத்துவம் , சரித்திர போக்குகள் , பயணம் ,போர்ச்சுகீசியர்களின் குரூரம் , ஸ்பானியர்களின் கடலோடி வாழ்க்கை ,பிரஞ்சு & ஆங்கிலயர்கலின் விரோதத்தின் காரண காரியங்களை விளக்கமாக எடுத்து சொன்னார்.
தொடர்ச்சியாக கற்பழிப்பு பற்றி பேச்சு சுழன்று திரும்பிய போது , இந்திய கற்பழிப்பு பற்றி செய்தி ஊடகங்கள் வெளியிடும் முறைகள் .இந்திய ஆண் மனம் செயல் படும் விதம் பற்றி கார சாரமான விவாதம் தூள் பறந்தது .இந்த விவாத முறையை கண்ட ராயர் மிரண்டே போனார்
. காலை அருமையான உணவிற்கு பின் long wood காட்டிற்குள் ஒரு நடை போனோம் பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் அது. மலபார் அணிலை பார்த்தோம் .சிறுத்தையின் கால் தடத்தையும் , கரடி மரத்தில் இருந்து இறங்கிய நக கீறல்களையும் பார்த்தோம் . நடைக்கு பின் ராயர் லேசாக தளர்ந்ததை கண்டு மீண்டும் ஒரு தேநீர் கொடுத்து காரில் ஏற்றி கோவை வந்து சேர்ந்தோம் .
ஒரு பன் முக ஆளுமையுடன் இரு நாட்கள் கழித்தது மிகவும் அருமையாக இருந்தது.