ஜெ..
எல்லாக் கொள்கைகளுக்கும் ஒரு பேரபாயம் உண்டு. அவற்றின் ஆன்மா மறக்கப் பட்டு , வழிமுறைகள் வழிபாடப்படுவதுதான் அது. கதரும், உண்ணாவிரதமும் அப்படி மலினப் படுத்தப் பட்டவை . இவைதாண்டி, அந்தக் கொள்கையாளரின் சில நல்ல சீடர்களால், அக்கொள்கை உயிர் வாழ்கிறது. அக்கொள்கையின் உண்மை நோக்கம் அறிந்து, காலத்திற்கேற்ப வழிமுறைகளை மாற்றி முன்னெடுத்துச் செல்பவர்களே சரியான சீடர்கள் – அவ்வகையில் இவர்கள் இருவரும் காந்தியத்தை முன்னெடுத்துச் செ