கண்ணதாசன்

நண்பர் மரபின் மைந்தன் முத்தையா கவிஞர் கண்ணதாசனின் பக்தர். மிகச்சிறு வயதிலேயே கண்ணதாசன் மீது பித்துகொண்டு அதன் வழியாக இலக்கியத்துக்கு வந்தவர். பெரும்பாலானவர்கள் கண்ணதாசன் பாடல்களை திரைப்பாடல்களாக, திரைப்படத்தின் பகுதிகளாக, மட்டுமே பார்க்கையில் முத்தையா அவற்றை இலக்கிய ஆக்கங்களாக பார்க்கிறார். ஒருவகை நவீனச்செவ்வியல் படைப்புகள் அவை என்பது அவரது எண்ணம்.

மரபின் மைந்தன் முத்தையாவுடன் உரையாட நேர்ந்த தருணங்களில் எல்லாம் அபூர்வமான கண்ணதாசன் வரிகளை மேற்கோள் காட்டுவார். பலசமயம் கேட்ட வரிகளாக இருக்கும். ஆனால் அவற்றை தனித்துக் கவனித்து அவற்றின் செவ்விலக்கிய வேர்களை தொட்டுக்கொள்கையில் அபூர்வமான ஒரு மனவிரிவு உருவாகும்.

கண்ணதாசனைப்பற்றி முத்தையா எழுதிவரும் ‘ இப்படித்தான் ஆரம்பம்’  என்ற கட்டுரைத்தொடர் 17 அத்தியாயங்களாக வந்துகொன்டிருக்கிறது. கட்டுரைத்தொடர் சமீபத்தில் என் மனதை மிகவும் கவர்வதாக இருக்கிறது

இப்படித்தான் ஆரம்பம்-6

http://marabinmaindanmuthiah.blogspot.com/

முந்தைய கட்டுரைஒரு சிறுகதை
அடுத்த கட்டுரைகன்னிநிலம் நாவல் தொகுப்பு