ராய் மாக்ஸம் தமிழகம் வருகை

hqdefault

‘உலகின் மிகப்பெரிய வேலி’ என்ற நூலின் ஆசிரியர் பிரிட்டிஷ் எழுத்தாளரான ராய் மாக்ஸம். அந்நூலைப்பற்றி என்னுடைய தளத்தில் விரிவான ஓர் அறிமுகக்குறிப்பை எழுதியிருந்தேன்.

சொல்புதிது வாசகர் குழும நண்பர்கள் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் ராய் மாக்ஸம் அவர்களை சந்தித்தனர்.தொடர்ந்து அவரது நூல் ‘உப்புவேலி’ என்ற பேரில் தமிழாக்கம் செய்யப்பட்டது. நண்பர் சிறில் அலெக்ஸ் மொழியாக்கம். எழுத்துபிரசுரம் வெ.அலெக்ஸ் பிரசுரிக்கிறார்

unnamed

நூல்வெளியீட்டை ஒட்டி ராய் மாக்ஸம் சென்ற 3 ஆம் தேதி ராய் நம் நண்பர்களின் விருந்தினராக இந்தியா வந்திருக்கிறார். சென்னையிலும் கோவையிலும் மதுரையிலும் சுற்றிப்பார்த்துவிட்டு திரும்புவார்

கோவையில் அரங்கசாமி அவருக்கு ஒரு சிறு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தியாகு புத்தக அரங்கில் இது நிகழும். நண்பர்கள் கலந்துகொள்ளலாம். [[email protected] ] அதன்பின் ராய் மதுரையில் அலெக்ஸுடன் தங்குவார்

unnamed

வரும் மார்ச் 15 அன்று சென்னையில் உப்புவேலி நூலுக்கு ஒரு வெளியீட்டுவிழா நிகழ்கிறது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், ஆய்வாளர் ராமச்சந்திரன், களப்பணியாளர் பால்ராஜ் ஆகியோர் பங்கெடுக்கிறார்கள். நானும் பேசுகிறேன். சிறில் அலெக்ஸ் அறிமுக உரை. ராய் மாக்ஸம் சிறப்புரையாற்றுவார்.

இடம் கவிக்கோ மன்றம், எண் 6 இரண்டாவது மெயின்ரோடு. சிஐடி காலனி மைலாப்பூர், சென்னை [மியூசிக் அக்காதமி மற்றும் நாரதகானசபா அருகில்]

நாள் 15-3-2015

உப்புவேலி பற்றிய கட்டுரை

முந்தைய கட்டுரைஉலகின் மிகப்பெரிய வேலி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 36