பங்குச்சந்தை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

தமிழ் இந்து நாளிதழில் நிதி வள நிர்வாகம் குறித்து ஒரு வாராந்திர கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன் (மூன்று மாதங்களாக). முடிந்த வரை எளிய தமிழில் எழுத முயற்சி செய்கிறேன்.

நிதிவள நிர்வாகத்தில் ‘ரிஸ்க்’ என்பது ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத கோட்பாடு. என்ன முயன்றாலும் என்னால் இதற்கான தமிழ் வார்த்தையை அடையாளம் காண முடியவில்லை.

உதாரணமாக சில வாக்கியங்கள்:

இந்த முதலீட்டு முறையில் ரிஸ்க் அதிகமுள்ளது.

ரிஸ்க் இல்லாத முதலீட்டு முறைகளில் லாபம் குறைவாக இருக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் முறையைக் கைகொண்டால், முதலீட்டின் ரிஸ்க் குறையும்.

ஆங்கிலத்தில் ரிஸ்க் என்ற வார்த்தை எப்போதும் ஒரு பாதகமான விஷயத்தை குறிப்பதாக இல்லை. ‘No risk, no reward’, ‘The higher the risk, the better the returns over long term’ போன்ற வாக்கியங்கள் ரிஸ்கை ஒரு சாதகமான விஷயமாகவே முன்வைக்கின்றன.

வாசகர்களுக்கு எளிதில் புரியும்படி இந்த வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை ஏதேனும் தெரிந்தால் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

ஸ்ரீகாந்த் மீனாட்சி

அன்புள்ள ஜெ,

நலமா? உங்களின் பங்கு சந்தை பற்றிய கருத்தை படித்தேன்.
எந்த திட்டதில் முதலீடு செய்தாலும் Risk இருக்கவே செய்கிறது. நிலத்தில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தை தரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொருளாதாரம் சரியும்போது எல்லாமும் சரியத்தான் செய்யும். நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நிலத்தை நம்பியே வாழ்பவர்கள், அவர்களின் முதலீடு நிலம், தங்கம் என இருப்பது இதனால்தான்.நம்முடைய மக்களிடம் இன்னமும் பங்குச்சந்தை பற்றிய தயக்கம் அதிகமாகவே உள்ளது.

உண்மையில் ஒரு காலத்தில் பங்குச்சந்தையில் பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. ஆனால் SEBI என்ற அமைப்பு அதை தடுக்க பல விதமான கெடுபிடிகளை கொண்டுவந்துள்ளது.

LIC-யில் போடும் பணமும், Insurance-யில் போடும் பணமும் பங்குச்சந்தையிலும் அதை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் இவர்கள் தருகிற வட்டிவிகிதம் 6% தாண்டாது. அதைவிட அதிகமாக வருமானத்தை தரும் பங்குச்சந்தையில் அதிக Risk இருக்கவே செய்யும். 2008-யில் விழுந்த பங்குச்சந்தை மீண்டும் எழந்து வந்துள்ளது. அது எப்போதும் ஈவிரக்கமற்ற ஏற்ற, இறக்கம் கொண்டது.

Risk அதிகம் எடுக்க தயக்கமுள்ளவர்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களான Mutual Fund, ELSS போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இவையெல்லாம் குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தை பெற்றுத்தராது. நீண்ட கால இடைவெளியில் நல்ல வருமானத்தை கொடுக்கும். ஒரு தென்னை கன்று நடப்பட்டு, மரமாகி, காய்த்து வருமானம் தரவே சுமார் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. அதுபோலதான் எல்லா முதலீட்டு திட்டமும்.

நம்முடைய கடமை எல்லா முதலீட்டுத்திட்டத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டியதுதான். முதலீடு செய்யபவர்கள் தங்களிடம் உள்ள எல்லா மூலதனத்தையும் ஒரே துறையிலும், ஒரே திட்டத்திலும் ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது. அதை விட முட்டாள்தனம் வேறில்லை. உலக பணக்கார பட்டியலில் உள்ளவர்களின் தாரக மந்திரம் இதுதான்.

On investment: Do not put all eggs in one basket
– Warren buffet

உங்களை நான் சென்னையில் நடந்த பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நடந்த போரட்டத்தில் சந்தித்தேன். நான் தற்போது ஒடிசாவில் வசிக்கிறேன்.

உங்களுடைய சூரியதிசைப் பயண கட்டுரைகளை தினமும் வாசிக்கிறேன். நான் அதில் உள்ள பெரும்பாலன இடங்களுக்கு சென்றிருந்தாலும் உங்களுடைய கட்டுரைகளை வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அப்போது இருந்ததில்லை.
அன்புடன்
மா.பா.செ.இராஜீவ்

ஜெயமோகன் அவர்களுக்கு

பங்குச்சந்தை- கடிதம் – http://www.jeyamohan.in/72413

உங்களுக்கு கீழ் இருக்கும் புத்தக வரிசைகள் பற்றி தெரிந்திருக்கலாம். விற்க்கும் பொறுட்டே எழுதபடுபவைகளில் ஒன்று நான்.
http://en.wikipedia.org/wiki/Rich_Dad_Poor_Dad

Robert Kiyosaki – இந்த நபரால் எழுதி பிரபலபடுத்த பட்ட தொடர் புத்தகங்கள்.
இவர் சொல்வது (நம் தேசத்தில் மேலும் பொருந்துமோ ?!?) வளர்ப்பிலேயே நாம் ‘பணம் பண்ணக்கூடிய’ சிந்தனையுடன் வளர்க்கப்படுவதில்லை என்பதாக.

இவரின் எல்லாக்கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை, பலரும் இவர் சொல்வது எவ்வளவு தவறு என்றும் சொல்கிறார்கள், என்றாலும் இந்த ‘பணம் பண்ணும் சிந்தனை’ கருத்தை சிந்தித்து கொண்டே இருக்கிறேன்.

என் குடும்பத்தில் முந்திய தலைமுறை தொழில் முனைவர்களாக இருந்து, இது வேண்டாம் என்று சொல்லியே வளர்ந்தார்கள். பங்குச்சந்தை பற்றி படித்தாலும், சம்பந்தமான தொழில்துறையில் இருந்தாலும் அது பக்கமே போகமாட்டேன். எனக்கு திரு. எஸ். குருமூர்த்தி அவர்களின் எழுத்தைப்படிக்கும்போதும் தோன்றுவது, நாம் நிஜமாக சேமிக்கும் பண்பு குடும்ப அமைப்பின் மூலம் இருப்பதால்தான் பங்குச்சந்தையில் ஈடு படுவதில்லையா? இல்லை ‘அதில கெடச்சத விட விட்டவன் தான் ஜாஸ்தி’ – என்றே தானா

ராகவ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 36
அடுத்த கட்டுரைராய் கடிதம்