கஷ்மீரிகள் போன்ற உணர்ச்சி வசப் படும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் உளரும் மக்களை அதிகம் பார்த்ததில்லை. இது எனது சொந்த அனுபவம். கொஞ்சம் மனச் சாய்வும் கூட.
தில்லியில் வேலை செய்த காலத்தில், ச்யவன் ப்ராஸுக்காக, குங்குமப் பூ வாங்குவேன். வருடம் 1.5 தேவை. இந்தியாவின் மொத்த உற்பத்தி 17 டன்கள். கஷ்மீர் பொருளாதாரத்துக்கு நான் எவ்வளவு முக்கியமாக இருந்திருப்பேன் என யோசித்துப் பாருங்கள்..
ஐந்து முக்கிய வியாபாரிகளும் தனித் தனியே வந்து மற்றவரைப் பற்றிய எல்லா அவதூறும் சொல்வார்கள். எல்லோர் கையிலும் ஃபரூக் அப்துல்லாவின் சிபாரிசு கடிதம் இருக்கும், என்னை, வணக்கத்துக்குரிய பாலா ஸாப் என விளித்து.. ஒரு முறை சொன்ன வார்த்தையை, அடுத்த முறை 180 டிகிரி மாற்றிச் சொல்வார்கள்.
ஆர்டர் கிடைக்கவில்லையெனில், மேலே முதலாளியிடம் சென்று பாலா இன்னொருவரிடம் காசு வாங்கிக் கொண்டு ஆர்டர் கொடுத்து விட்டார் என அவதூறு சொல்வார்கள். மொட்டைக் கடிதம் போடுவார்கள். அடுத்த வருடம் மீண்டும், சிபாரிசுக் கடிதம் சகிதமாக வருவார்கள்.. “பாலா ஸாப்.. பாபி (அண்ணி) கே லியே பஷ்மீனா ஷால் லாயா ஹூம் என..
இன்று முஃப்டி முகம்மதின் வார்த்தைகளைப் படித்ததும் சிரிப்பு வந்தது. கொள்ளிக் கட்டையில் தலையைச் சொறிந்து கொள்ளும் இனம் என..
பாலா